» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா அச்சுறுத்தல்: தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
திங்கள் 17, நவம்பர் 2025 5:02:52 PM (IST)
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா வைரஸ் பரவி வரும் நிலையில், சபரிமலை சென்று வந்து 3 நாட்களுக்கு பின் காய்ச்சல், உடல் வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மூளை தின்னும் அமீபா என அழைக்கப்படும் அமீபிக் மெனிஙோ என்செபாலிடிஸ் என்ற நோய் பரவி வருகிறது. இதற்கிடையே, சபரிமலையில் இவ்வாண்டு மண்டல–மகர விளக்கு பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனத்திற்காக வந்து செல்லவுள்ளனர். சபரிமலை செல்லும் பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது மூக்கிற்குள் நீர் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கொண்டும், பல அறிவுறுத்தல்களை அந்த மாநில சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறையும் பக்தர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:"கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோய் பரவும் நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம். சபரிமலை சென்று வந்து 3 நாட்களுக்கு பின் காய்ச்சல், உடல் வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
ஆறுகள், குளம் போன்ற நீர்நிலைகளில் குளிக்கும் போது மூக்கினுள் நீர் செல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். கொதிக்க வைத்த நீரை பருகவும்.மலை ஏறும் போது மெதுவாக இடைவெளி விட்டு ஏறவும். கொரோனா தொற்று போல அமீபா பரவாது என்பதால் சபரிமலை செல்வோர் அச்சப்பட தேவையில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநில ஹேக்கத்தான் இன்னோவேஷன் போட்டி: தூத்துக்குடி ஸ்பிக்நகர் பள்ளி மாணவர்கள் சாதனை!
திங்கள் 17, நவம்பர் 2025 5:49:10 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளால் சுமார் ஒரு கோடி பேர் வாக்குரிமை இழப்பர் - சீமான் குற்றச்சாட்டு!
திங்கள் 17, நவம்பர் 2025 5:41:09 PM (IST)

தமிழகத்துக்கு வரவேண்டிய முதலீடு ஆந்திராவுக்குச் சென்றது கவலை அளிக்கிறது : பிரேமலதா பேட்டி
திங்கள் 17, நவம்பர் 2025 4:56:58 PM (IST)

கடலில் படகு இரண்டாக உடைந்து விபத்து: மீனவர் தப்பினார் - மற்றொருவர் மாயம்!
திங்கள் 17, நவம்பர் 2025 4:25:54 PM (IST)

சவுதி அரேபியாவில் சாலை விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
திங்கள் 17, நவம்பர் 2025 3:58:31 PM (IST)

தூத்துக்குடி, நெல்லை, குமரியில் கனமழை எப்போது துவங்கும்? வெதர்மேன் தகவல்!
திங்கள் 17, நவம்பர் 2025 3:44:28 PM (IST)




