» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை : இன்ஸ்டா பிரபலம் உள்பட 6 பேர் கைது

வெள்ளி 21, நவம்பர் 2025 11:15:03 AM (IST)

சென்னையில் போதை மாத்திரைகளை விற்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர் ஒருவர் வலி நிவாரண மாத்திரைகளை இன்ஸ்டாகிராம் மூலம் போதைக்காக விற்பனை செய்வதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் மீனாம்பாள் சாலை பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற டோலு (27) வீட்டில் போலீசார் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து 420 வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில், அவர் இன்ஸ்டாகிராம் பிரபலம் என்பதும் அதன் மூலம் பலருக்கு போதை மாத்திரை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இவர் கொடுத்த தகவலின் பெயரில் வியாசர்பாடி கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (23), கொடுங்கையூர் எழில் நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அஜித்குமார் (27), ரஞ்சித் (23), பிரவீன் (22), பைசன் அகமது (23) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இவர்களிடம் இருந்து மொத்தம் 1,166 மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory