» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செங்கோட்டையனை தவெகவிற்கு வரவேற்கிறேன்; வெற்றி நிச்சயம் : விஜய் பேச்சு!

வியாழன் 27, நவம்பர் 2025 11:45:14 AM (IST)



தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். வெற்றி நிச்சயம் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று இணைந்துள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;-

தமிழக அரசியல் களத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ள செங்கோட்டையன் இன்று விஜய்யின் தவெக்வில் இணைந்தார். தவெகவில் செங்கோட்டையன் இணைந்த நிலையில், அவருக்கு பொன்னாடை போர்த்தி விஜய் வரவேற்பு அளித்தார். செங்கோட்டையன் கட்சியில் இணைந்தது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: 20 வயது இளைஞராக இருக்கும் போதே எம்.ஜிஆர் மன்றத்தில் சேர்ந்தவர். சின்ன வயசிலேயே எம்.எல்.ஏ என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர்.. அதற்கப்புறம் அந்த பயணத்தில் அந்த இயக்கத்தில் இரு பெரும் தலைவர்களுக்கு பெரிய நம்பிக்கைக்கு உரியவராக அரசியல் களத்தில் இருந்தவர் செங்கோட்டையன்.

இப்படி 50 வருடமாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் அவர்கள், இன்று அவர்களின் அரசியல் அனுபவமும் அரசியல் களப்பணியும் நம்முடைய தவெகவிற்கு பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்று அவுங்களுக்கும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற நம்முடன் கைகோர்க்கும் அனைவருக்கும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். நல்லதே நடக்கும். நல்லது மட்டுமே நடக்கும் வெற்றி நிச்சயம்" என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory