» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் ஒரே இரவில் 25 மாடுகள் பறிமுதல் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

வெள்ளி 5, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)



தூத்துக்குடி ஒரே நாள் இரவில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக திரிந்த 25 மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து கோசாலையில் ஒப்படைத்தனர். 

தூத்துக்குடி மாநகரின் முக்கிய சாலைகள் மற்றும் போக்குவரத்து அதிகமுள்ள தெருக்களில் தற்போது கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. 

இதனையடுத்து  மேயர் ஜெகன் உத்தரவின் பெயரில் ஆணையர் பிரியங்கா ஆலோசனையின் படி சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் விதமாக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். கடந்த வாரம் 35 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நகர்நல அலுவலர் சரோஜா மேற்பார்வையில் சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் நேற்று இரவு ஒரு மணி அளவில் பாளை ரோடு அரசு பாலிடெக்னிக் முன்பு சாலைகளில் திரிந்த எட்டு மாடுகளை பறிமுதல் செய்தனர். 

மேலும், முத்தையாபுரம், முள்ளக்காடு, ஸ்பிக் நகர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் இரவு நேரத்தில் போக்குவரத்து இடையூறாக தெரிந்த 17 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 4 மணி வரையிலும் மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட மாடுகள் மாநகராட்சி கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மாடுகளுக்கு உணவு வழங்கி பராமரிக்கப்பட்டது. 

மேலும் கால்நடை வளர்ப்போர் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் கொட்டில் அமைத்து முறையாக பராமரிக்குமாறு மாநகராட்சி சார்பில் மீண்டும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்நிலை தொடருமாயின் மேற்படி அபராதங்கள் கூடுதலாக விதிப்பதோடு கால்நடையின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

BabuDec 6, 2025 - 07:37:06 AM | Posted IP 162.1*****

ipo theru naya vida maadu thollai thangala ithukum oeration panni vidunga atha valakuravanuga sari airuvanuga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory