» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து: ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு
சனி 6, டிசம்பர் 2025 11:40:40 AM (IST)
கீழக்கரை அருகே நின்று கொண்டிருந்த கார் மீது மற்றொரு கார் மோதியதில் 4 ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
ஆந்திராவில் இருந்து 5 ஐயப்ப பக்தர்கள் ராமேசுவரத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக ஒரு காரில் ராமேசுவரம் நோக்கி வந்துள்ளனர். நீண்ட பயணத்தால் சோர்வடைந்த அவர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் கீழக்கரை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உணவகம் ஒன்றின் அருகே காரை நிறுத்திவிட்டு காரிலேயே தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது கார் ஒன்று ஏர்வாடியில் இருந்து கீழக்கரை நோக்கி 7 பேருடன் வந்தது. அந்தக் கார் நின்று கொண்டிருந்த ஆந்திராவை சேர்ந்த காரின் பின்புறம் மீது வேகமாக மோதியது. இதில் ஆந்திராவைச் சேர்ந்த காரில் இருந்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலும், கீழக்கரையிலிருந்து காரை ஓட்டிவந்த ஓட்டுநர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
மேலும் கீழக்கரையைச் சேர்ந்த 6 பேர் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் என 7 பேர் பலத்த காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழக்கரை போலீஸார் விபத்தில் உயிரிழந்த கீழக்கரையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் முஷ்டாக் அகமது (30), ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ராமச்சந்திர ராவ் (55), அப்பாரோ நாயுடு(40), பண்டார சந்திரராவ் (42), ராமர் (45) ஆகிய ஐந்து பேரின் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து கீழக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு : வானிலை ஆய்வாளர் கணிப்பு!
சனி 6, டிசம்பர் 2025 11:51:16 AM (IST)

இண்டிகோ விமான சேவை ரத்து: பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரயில்கள்
சனி 6, டிசம்பர் 2025 11:45:19 AM (IST)

வைகோ தலைமையில் சமத்துவ நடைபயணம்: ஜன.2ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்!
சனி 6, டிசம்பர் 2025 10:16:36 AM (IST)

இளம்பெண்ணை தாக்கி 2½ பவுன் நகை பறிப்பு : 2 வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
சனி 6, டிசம்பர் 2025 8:32:02 AM (IST)

தூத்துக்குடி அனல்நிலையத்தில் 5 யூனிட்டுகள் நிறுத்தம்: 1050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!
சனி 6, டிசம்பர் 2025 8:25:15 AM (IST)

விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்..!!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:55:02 PM (IST)


