» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி

ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

ஈரோட்டில் பெருந்துறை அருகே தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, விஜயமங்கலம் சரளை பகுதியில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கிற பிரசார கூட்டம் வருகிற டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெகவினா் தோ்தல் பிரசார கூட்டம் நடத்த போலீஸாா் 84 கட்டுப்பாடுகளை விதித்துள்ளனா். இவற்றை செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுவதால், 16-ஆம் தேதிக்கு பதிலாக 18-ஆம் தேதி இந்தப் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ள தவெகவினா் முடிவு செய்துள்ளனா். 

விஜய் பிரசாரம் செய்யும் இடம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என விஜயபுரி அம்மன் கோயில் செயல் அலுவலர் மாவட்ட ஆட்சியர், காவல்துறையில் கடிதம் அளித்திருந்தார். இதனால் விஜய் பிரசார கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை இடத்தை பயன்படுத்திக்கொள்ள தவெக சார்பில் கட்டணம் செலுத்தப்பட்டதால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் நிலத்தை பயன்படுத்த டெபாசிட் மற்றும் கட்டணமாக ரூ.1 லட்சம் செலுத்தப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory