» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும் : கனிமொழி எம்.பி
திங்கள் 22, டிசம்பர் 2025 5:04:28 PM (IST)

தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திமுக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும் என்று கனிமொழி எம்.பி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முதல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது.
இதன் பின்னர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; ”வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கை குழுவை உருவாக்கி உள்ளார். தேர்தல் அறிக்கை என்பது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று, தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும்.
குறிப்பாக, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள், மகளிர் உரிமைகள், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமிப் பந்தை பாதுகாப்பது, விவசாயிகள் பாதுகாப்பு, ஒன்றிய அரசு மக்களிடமிருந்து வேலைவாய்ப்புகளை பறிப்பதையே ஒரு வேலையாக செய்து கொண்டிருக்கும் இச்சூழலில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, மாநில உரிமைகளுக்காகப் போராடுவது போன்ற அம்சங்கள் நிச்சயமாக தேர்தல் அறிக்கையின் மையமாக இருக்கும்." என்று பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள்: சிறப்பு கண்காணிப்பு அலுவலர் விஜய் நெக்ரா ஆய்வு
திங்கள் 22, டிசம்பர் 2025 5:27:18 PM (IST)

நாகர்கோவிலில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
திங்கள் 22, டிசம்பர் 2025 4:56:33 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : 335 கோரிக்கை மனுக்கள்!
திங்கள் 22, டிசம்பர் 2025 4:47:24 PM (IST)

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் : தவெக கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு நவாப் பேச்சு!
திங்கள் 22, டிசம்பர் 2025 3:46:54 PM (IST)

திமுக ஆட்சியை அகற்ற ஒற்றை கருத்துடைய கட்சிகள் கூட்டணியில் இணையலாம்: இபிஎஸ்
திங்கள் 22, டிசம்பர் 2025 12:26:58 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

