» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜய் காரை மறித்து தூத்துக்குடி தவெக பெண் நிர்வாகி போராட்டம்: பனையூரில் பரபரப்பு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:16:59 PM (IST)
சென்னை பனையூரில் கட்சி அலுவலகத்துக்கு வருகைதந்த விஜய்யின் காரை மறித்து தூத்துக்குடி நிர்வாகி அஜிதா மற்றும் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்களின் பெயர்கள் பல்வேறு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் செயலாளர் பதவி அறிவிக்கப்படவுள்ளனர். இந்த நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல் என்ற பெண் நிர்வாகி, தனது பெயர் மாவட்டச் செயலாளர் பட்டியலில் இல்லாததை அறிந்து அதிர்ச்சியில் இருந்துள்ளார்.சென்னை அடுத்த பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தின் வாயிலில் இன்று காலைமுதல் தனது ஆதரவாளர்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் அஜிதா ஈடுபட்டிருந்தார். இன்று பகல் 1 மணியளவில் தவெக அலுவலகத்துக்கு வருகைதந்த கட்சியின் தலைவர் விஜய்யின் காரை மறித்து அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
ஆனால், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் போராட்டக்காரர்களை விலக்கிய நிலையில், விஜய் காரை நிறுத்தாமல் அலுவலகத்துக்குள் சென்றுவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த அஜிதா மற்றும் ஆதரவாளர்கள் அலுவலகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 4:25:54 PM (IST)

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசக்கூடாது: மலேசிய அரசு நிபந்தனை?
செவ்வாய் 23, டிசம்பர் 2025 4:07:36 PM (IST)

கிறிஸ்துமஸ், புத்தாண்டு: குமரி மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு - எஸ்பி தகவல்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:30:52 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:53:41 PM (IST)

அடுத்த முறையும் திராவிட மாடல் ஆட்சி தொடரும் : கனிமொழி எம்.பி நம்பிக்கை!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:20:19 PM (IST)

வரலாறு காணாத புதிய உச்சம்: மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்த தங்கத்தின் விலை..!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 11:15:56 AM (IST)

