» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காரில் ஏற முயன்றபோது கீழே விழுந்த விஜய் : சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

திங்கள் 29, டிசம்பர் 2025 11:14:34 AM (IST)



சென்னை விமான நிலையத்தில், காரில் ஏற முயன்றபோது, நடிகர் விஜய் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இயக்குநர் எச். வினோத் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜலீல் திடலில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்தியா சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் 80 ஆயிரம் ரசிகர்களுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதனிடையே, மலேசியா நிகழ்ச்சியை முடித்துகொண்டு நடிகர் விஜய் நேற்று(டிச. 28) இரவு சென்னை திரும்பினார். மலேசியாவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த தவெக தலைவரும் நடிகருமான விஜய்யை வரவேற்க ரசிகர்கள், தொண்டர்கள் பலர் திரண்டிருந்தனர்.விஜய் தனது காரில் ஏற முயன்றார். 

அப்போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் விஜய் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னர், சமாளித்து கொண்டு அவரே மீண்டும் எழுந்தார். உடனடியாக விஜய்யை மீட்ட பாதுகாவலர்கள், அவரை காரில் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory