» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் ரயில்களின் நேரம் ஜன.1 முதல் மாற்றம்!
திங்கள் 29, டிசம்பர் 2025 11:20:08 AM (IST)
சென்னை எழும்பூரில் இருந்து ரயில்கள் புறப்படும் நேரம் வருகிற 1-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, நெல்லை, பொதிகை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே கூறலாம். இந்த ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம் வருகிற 1-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம் மாற்றம்
1. சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 1-ம் தேதி முதல் எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு பதிலாக 10.40 மணிக்கு புறப்படும்.
2. எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.50 மணிக்கு புறப்படும்.
3. எழும்பூரில் இருந்து காலை 7.45 மணிக்கு திருச்சி புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் 8 மணிக்கு புறப்படும்.
4. சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில், ஜனவரி 1-ம் தேதி முதல் முன்கூட்டியே 7.35 மணிக்கு புறப்படும்.
5. எழும்பூரில் இருந்து இரவு 7.15 மணிக்கு ராமேசுவரம் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 8.35 மணிக்கு புறப்படும்.
6. எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் 1.15 மணிக்கு முன்கூட்டியே புறப்பட்டுவிடும்.
7. எழும்பூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 7.15 மணிக்கு புறப்படும்.
8. எழும்பூரில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 3.05 மணிக்கு புறப்படும்.
9. எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் நேரம் மாற்றப்படவில்லை.
மறுமார்க்கமாக....
1. நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்கு பதிலாக 8.50-க்கு புறப்படும்.
2. சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக மதியம் 12.10 மணிக்கு புறப்படும்.
3. செங்கோட்டையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் 6.50 மணிக்கும் புறப்படும்.
4. ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 6 மணிக்கு புறப்படும்.
5. தூத்துக்குடியில் இருந்து எழும்பூர் வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்கு பதிலாக 9.05 மணிக்கு புறப்படும்.
6. இதேபோல, குருவாயூர், வைகை, நெல்லை வந்தே பாரத் ஆகிய ரயில்களில் மறுமார்க்கமாக புறப்படும் நேரத்தில் மாற்றமில்லை.
மின்சார ரயில் நேர மாற்ற அட்டவணையும் விரைவில் வெளியாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்
திங்கள் 29, டிசம்பர் 2025 5:22:52 PM (IST)

இருக்கின்ற திட்டங்களையே பராமரிக்க இயலாத தி.மு.க. அரசு: ஓபிஎஸ் கடும் தாக்கு!
திங்கள் 29, டிசம்பர் 2025 4:48:08 PM (IST)

நான் என் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை: பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!
திங்கள் 29, டிசம்பர் 2025 4:41:54 PM (IST)

திமுக ஆட்சியில் திரும்பிய திசையெல்லாம் போராட்டம்: அன்புமணி குற்றச்சாட்டு!
திங்கள் 29, டிசம்பர் 2025 4:31:29 PM (IST)

சுசீந்திரம் தேரோட்ட திருவிழா: குமரி மாவட்டத்திற்கு ஜன.2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
திங்கள் 29, டிசம்பர் 2025 4:18:47 PM (IST)

தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயரை மாற்ற வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்!
திங்கள் 29, டிசம்பர் 2025 3:23:16 PM (IST)


