» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெல்லும் தமிழ் பெண்கள்: விமானத்தில் தமிழிசை சவுந்தரராஜனுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு

திங்கள் 29, டிசம்பர் 2025 11:23:34 AM (IST)



அரசியலில் எதிரும், புதிருமாக உள்ள கனிமொழி எம்பி - தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் சந்தித்து ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

திருப்பூரில் இன்று திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற பெயரில் நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் இந்த மாநாட்டுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்குகிறார்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து கோவை சென்ற விமானத்தில் திமுக பெண் எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கனிமொழி சோமு ஆகியோர் பயணம் மேற்கொண்டனர். அதே விமானத்தில், தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும் சென்றனர்.

அரசியலில் எதிரும், புதிருமாக இவர்கள் இருந்தாலும் விமானத்தில் பரஸ்பரமாக சந்தித்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படத்தை கனிமொழி எம்.பி. தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டு, 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்று அந்த படத்திற்கு கீழே பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory