» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முத்தாலங்குறிச்சி காமராசுவின் நெல்லை சீமையில் கிறித்தவம் நூல்: கவிஞர் வைரமுத்து வெளியிட்டார்!

வெள்ளி 2, ஜனவரி 2026 10:20:44 AM (IST)



சென்னையில், முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய "நெல்லை சீமையில் கிறித்தவம்" என்று நூலை கவிஞர் வைரமுத்து வெளியிட்டார்.

சென்னை கோடம்பாக்கம் பாம்குரோவ் ஹோட்டலில் காவ்யா பதிப்பகம் சார்பில் 12 புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. இந்த புத்தங்களை கவிஞர் வைரமுத்து வெளியிட்டார். இதில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நெல்லை சீமையில் கிறித்தவம் என்ற நூலும் வெளியிடப்பட்டது. இந்த நூலை அயோத்தி திரைப்பட இயக்குனர் மந்திர மூர்த்தி, சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்க தலைவர் சைமன் ஜெயக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

இந்த நிகழ்வில் சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்கம் சார்பில் பவள விழா நாயகன் காவ்யா சண்முகசுந்தரம், கவிஞர் வைரமுத்து ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  சங்க செயலாளர் சங்கர்மணி, திரைப்பட உதவி இயக்னுர் ரூபன், டாப் டிவி ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை காவ்யா சண்முக சுந்தரம் தலைமையில் காவ்யா பதிப்பகம் செய்து இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory