» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஸ்டாலின் மீண்டும் முதல்வர்; விஜய் 2-ம் இடம்: லயோலா கருத்துக் கணிப்பு முடிவுகள்!
சனி 3, ஜனவரி 2026 3:56:49 PM (IST)

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வர் என்றும், எடப்பாடி பழனிசாமியை பின்னுக்குத் தள்ளி விஜய் இரண்டாம் இடத்தை பிடிப்பார் என்றும் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய முதல்வர் வேட்பாளருக்கான கருத்துக் கணிப்பில் முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். தவெக தலைவர் விஜய்க்கு இரண்டாம் இடமும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 3-ஆம் இடமும், சீமானுக்கு 4-ஆம் இடமும், அண்ணாமலைக்கு 5- ஆம் இடமும் கிடைத்துள்ளது.
தவெகவால் யாருக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்துக் கணிப்பின் முடிவில், திமுகவுக்கே அதிகம் பாதிப்பு ஏற்படும் என முடிவுகள் வெளியாகியுள்ளது. அடுத்ததாக விசிக, அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், தவெகவால் நாம் தமிழர் கட்சிக்கு சொற்ப அளவே பாதிப்பு ஏற்படும் என முடிவுகள் வெளியாகியுள்ளது.
புதிய வாக்காளர்களை கவரும் இளம் தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பில் விஜய்க்கு முதல் இடமும், அண்ணாமலைக்கு 2-ஆம் இடமும், உதயநிதிக்கு 3-ஆம் இடமும், சீமானுக்கு 4-ஆம் இடமும் கிடைத்துள்ளது.
இந்தக் கருத்துக்கணிப்புக்காக நகரங்களில் 54.8% பேரிடமும், கிராமங்களில் 41.3 சதவீதம் பேரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த கருத்துக் கணிப்பு 234 தொகுதிகளிலும் 81,375 பேரிடம் கருத்து கேட்கப்பட்டதன் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் 21 முதல் 30 வயதினர் 25.6 சதவிகிதம் பேரிடமும், 46 முதல் 60 வயதினர் 23.5 சதவிகிதம் பேரிடமும் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 41.3 சதவிகிதம் பேர் 31 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த கருத்துக் கணிப்பில் 81.71 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்றும், 10.55 சதவிகிதம் பேர் கிறிஸ்தவர்கள் என்றும், 7.75 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
ஞாயிறு 4, ஜனவரி 2026 8:40:14 PM (IST)

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3,000 வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஞாயிறு 4, ஜனவரி 2026 1:06:11 PM (IST)

அ.தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல்: 12-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம்!
ஞாயிறு 4, ஜனவரி 2026 9:32:00 AM (IST)

தாமிரபரணி தூய்மை திட்டம் உருவாக்க ராஜஸ்தான் நிபுணர் நியமனம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
ஞாயிறு 4, ஜனவரி 2026 9:02:51 AM (IST)

அரசு மருத்துவமனையில் மதுவிருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டம்: மருத்துவர்கள் உள்பட 5 பேர் சஸ்பெண்ட்
சனி 3, ஜனவரி 2026 5:04:50 PM (IST)

தமிழகத்தில் 9-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை!
சனி 3, ஜனவரி 2026 4:59:17 PM (IST)


