» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டிற்கு முக்கியமான தேர்தல்; திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது : அன்புமணி பேச்சு

வெள்ளி 9, ஜனவரி 2026 12:55:23 PM (IST)

வரும் சட்டசபை தேர்தல் தமிழ்நாட்டிற்கு முக்கியமான தேர்தல். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி பேசினார்.

அன்புமணி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனிடையே, சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. 

இந்நிலையில், செங்கல்பட்டில் நேற்று இரவு பாமக கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அன்புமணி பேசியதாவது, பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்து விட்டால் ஊழலை மக்கள் மறந்து விடுவார்கள் என்று திமுக நினைக்கிறது. அதிமுக கூட்டணியில் நாம் இணைந்த உடன் தோற்றுவிடுவோம் என்று திமுக முடிவு செய்துவிட்டது.

வரும் சட்டசபை தேர்தல் தமிழ்நாட்டிற்கும், உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் முக்கியமான தேர்தல். தமிழகத்தில் உள்ள அனைத்து பெற்றோரும் சிந்தித்து பார்க்க வேண்டும். உங்கள் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளின் எதிர்காலம் திமுக ஆட்சியில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. விவசாயிகளின் காலை தொட்டு கேட்கிறேன் தயவு செய்து திமுகவுக்கு யாரும் ஓட்டு போடாதீர்கள்’ என்று பேசினார்.


மக்கள் கருத்து

BalaJan 9, 2026 - 01:22:10 PM | Posted IP 104.2*****

Nee irukura catch urupudathu.. meendum DMK Vellum..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory