» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தை பராசக்தி படம் காட்டியுள்ளது: அண்ணாமலை பாராட்டு

திங்கள் 12, ஜனவரி 2026 12:41:39 PM (IST)


காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தை பராசக்தி படம் காட்டியுள்ளது. இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். 

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியானது. பராசக்தி படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில், 'பராசக்தி' எல்லாரும் பார்க்க வேண்டிய படம் என்று அண்ணாமலை பார்ட்டியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "2026 சட்டமன்ற தேர்தலில் பராசக்தி திரைப்படம் திமுகவின் முரசொலியாக அவர்களையே வீழ்த்தும். தீ பரவட்டும் என வைத்திருக்கிறார்கள். 

முதலில் அவர்கள் வீட்டைத்தான் தீ கொளுத்தும். காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது. காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கிற உங்கள் கூரையில் தீ பரவட்டும். இன்னும் ஒரு வாரத்தில் முதலமைச்சர் பராசக்தி படம் பார்த்துவிட்டு ரிவிவ்யூ போடுவார். பராசக்தி' எல்லாரும் பார்க்க வேண்டிய படம்" என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory