» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரங்காபானி-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில்: இன்று முதல் தொடக்கம்!
சனி 17, ஜனவரி 2026 10:58:13 AM (IST)
மேற்குவங்க மாநிலம் ரங்காபானி-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
நாடு முழுவதும் ரயில் பயணத்தை விரைவு படுத்தும் வகையில் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேற்குவங்கம் ரங்காபானி-நாகர்கோவில் (வண்டி எண்.02603) இடையே வந்தே பாரத் ரயில் இன்று (சனிக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.
அதன்படி மேற்குவங்கம் ரங்காபானி ரயில் நிலையத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு திருப்பூருக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 8.56 மணிக்கு வந்து செல்லும். இந்த ரயில் கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை வழியாக நாகர்கோவிலை இரவு 7.15 மணிக்கு சென்றடையும். மேற்கண்ட தகவலை சேலம் ரயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
_1768652448.jpg)
ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் யாராவது கேட்டார்களா? சீமான் விமர்சனம்!
சனி 17, ஜனவரி 2026 5:51:10 PM (IST)

ஆத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டி பெண் உள்பட 2 பேர் பலி!
சனி 17, ஜனவரி 2026 5:40:14 PM (IST)

ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு அரசு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சனி 17, ஜனவரி 2026 4:50:38 PM (IST)

பொங்கல் பரிசு பணத்தை டாஸ்மாக் வாயிலாக வசூலித்துள்ள திமுக அரசு : பாஜக தாக்கு..!
சனி 17, ஜனவரி 2026 4:45:10 PM (IST)

திமுக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அதிமுக: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தாக்கு
சனி 17, ஜனவரி 2026 4:38:34 PM (IST)

உடையார்விளையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் : முன்னாள் அமைச்சர் பச்சைமால் மரியாதை
சனி 17, ஜனவரி 2026 3:19:54 PM (IST)

