» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவிலில் பராமரிப்பு பணி: 5 விரைவு ரயில்கள் கன்னியாகுமரியில் இயக்கம்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:20:22 PM (IST)

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்காலிகமாக கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
இதன்படி தாம்பரத்தில் இருந்த புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.22657) கன்னியாகுமரி வரை செல்லும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (22658) கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.
மங்களூரு சென்டிரலில் இருந்த புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16649), கன்னியாகுமரி வரை செல்லும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மங்களூரு சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16650), கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.
தாம்பரத்தில் இருந்த புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12667), கன்னியாகுமரி வரை செல்லும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (12668), கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.
சென்னை சென்டிரலில் இருந்த புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12689), கன்னியாகுமரி வரை செல்லும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (12690), கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.
நாகர்கோவிலில் இருந்து நெல்லை செல்லும் ரயில் (56707), கன்னியாகுமரியில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் (56708), கன்னியாகுமரி வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சகிப்பின்மைக்கு இடமில்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி எம்.பி. ஆதரவு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:11:07 PM (IST)

அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை வாசிப்பது ஆளுநரின் கடமை: சபாநாயகர் அப்பாவு
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:53:55 PM (IST)

தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் : 600பேர் கைது
செவ்வாய் 20, ஜனவரி 2026 12:35:56 PM (IST)

சட்டசபையில் இருந்து வெளியேறியது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: ஸ்டாலின் கண்டனம்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 12:25:01 PM (IST)

தமிழக அரசு மீது 13 குற்றச்சாட்டுகள்: வெளிநடப்பு செய்தது குறித்த ஆளுநர் விளக்கம்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 12:12:17 PM (IST)

தமிழக மக்களை இரையாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: இபிஎஸ் குற்றச்சாட்டு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 10:22:25 AM (IST)

