» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் ரூ.2,292 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

வியாழன் 22, ஜனவரி 2026 11:52:45 AM (IST)

தூத்துக்குடியில்  ரூ.2,292 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப்பணிகளை காணொளி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்படி தூத்துக்குடி முள்ளக்காட்டில் ரூ.2,292 கோடி மதிப்பில், 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் அமைக்கப்படும் மந்தைவெளி பஸ் பணிமனை மற்றும் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து மற்றும் வணிக வளாகத்திற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.தொடர்ந்து சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை சார்பில் ராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நான்கு வழி சாலைப் பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory