» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தீய சக்தி திமுக, ஊழல் சக்தி அதிமுக இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது : விஜய் பேச்சு

ஞாயிறு 25, ஜனவரி 2026 2:07:46 PM (IST)



தீய சக்தி தி.மு.க., ஊழல் சக்தி அ.தி.மு.க. இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது என்று த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் பேசினார்.

மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விஜய் கூறியதாவது: தி.மு.க.வுக்கு முன்னாடி தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் பா.ஜ.க. அடிமையாக தான் இருக்கிறார்கள்.  பா.ஜ.க.வுக்கு தி.மு.க. மறைமுகமாக சரண்டர் ஆகி உள்ளது.

த.வெ.க. வந்த பிறகு ஊழல் செய்ய மாட்டேன். செய்யவும் விட மாட்டேன். அழுத்தமா? நமக்கா? அழுத்தத்திற்கெல்லாம் அடங்குகிற ஆளா நான். அழுத்தம் இருக்கிறதா என்றால் இல்லை என்று சொல்லமாட்டேன். மக்கள் அழுத்தத்தில் தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றி மாற்றி வாக்களித்து தற்போது அழுத்தத்தில் இருக்கிறார்கள்.

தீய சக்தி தி.மு.க., ஊழல் சக்தி அ.தி.மு.க. இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது.
அண்ணா ஆரம்பித்த கட்சியும், அண்ணாவின் பெயரைக்கொண்ட கட்சியும் அண்ணாவை மறந்து விட்டன. அடங்கிப் போவதற்கோ, அடிமையாக இருப்பதற்கோ, அண்டி பிழைப்பதற்கோ அரசியலுக்கு வரவில்லை. அரசியல் பயணத்தில் முக்கியமான கால கட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தினர் இருக்கிறோம்.

தி.மு.க., அ.தி.மு.க.விற்கு பூத் என்பது கள்ள ஓட்டு போடும் இடம். மக்களை பாதுகாக்கவே அரசியலுக்கு வந்துள்ளோம். யாருக்காகவும் எதற்காகவும் நம்முடைய அரசியலில் சமரசம் செய்ய மாட்டோம். 30 ஆண்டுகளாக நம்மை குறைத்து மதிப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். உழைக்கும் குணம் ஒரு போதும் மாறாது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory