» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜகவும், அதிமுகவும் நெருக்கடி கொடுக்கவில்லை: விஜயதரணி
வியாழன் 29, ஜனவரி 2026 5:41:37 PM (IST)
தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜகவும், அதிமுகவும் நெருக்கடி கொடுக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை என பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திமுக கூட்டணியில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு எதிரான மனப்போக்கில் உள்ளது. திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி பிரிந்துவிடும். காங்கிரஸில் பெருவாரியான நபர்கள், நிர்வாகிகள், பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் வேறு கூட்டணிக்கு செல்ல வேண்டுமென, தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் மேலிடத்தில்கூட, ஒரு சாரார் திமுக கூட்டணி வேண்டாம் என கூறி வருகின்றனர். ஜனநாயகன் படம் தொடர்பாக தணிக்கைச் சான்றுபெற உரிய ஆவணங்களை சமர்ப்பித்தாலே பிரச்சினைகள் தீர்ந்து விடும். சான்று வழங்குவதற்கான சாத்தியகூறுகள் ஏற்படும். எனவே, இப்படம் தொடர்பாக சட்டரீதியான வழிமுறைகளை படக்குழு பின்பற்ற வேண்டும். இதைத்தான் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளன.
இந்த விவகாரத்தில் பாஜக மீது வேண்டுமென்றே பழி சொல்லக்கூடாது. தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜகவும், அதிமுகவும் நெருக்கடி கொடுக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.படத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது. அப்படி அரசியல் செய்து கொண்டிருந்தால் படம் வெளிவராமல் போய்விடும் என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு கல்லூரியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: கேன்டீன் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது
வெள்ளி 30, ஜனவரி 2026 10:26:17 AM (IST)

வாழ்க்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ளக் கூடாது: ஆன்மீக குரு ரவிசங்கர் பேச்சு!
வெள்ளி 30, ஜனவரி 2026 8:32:42 AM (IST)

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட தீர்மானம் : தமிழக முதல்வருக்கு ஆயர் கடிதம்!
வியாழன் 29, ஜனவரி 2026 8:19:25 PM (IST)

புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வியாழன் 29, ஜனவரி 2026 7:53:46 PM (IST)

கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகள் தேர்வு : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 29, ஜனவரி 2026 5:12:53 PM (IST)

அதிமுகவில் மீண்டும் இணைய ஓபிஎஸ் விருப்பம்: எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுப்பு!
வியாழன் 29, ஜனவரி 2026 4:21:38 PM (IST)

