» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 4.00 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.
இது இதற்கு முன்பு 2024 மார்ச் மாதத்தில் எட்டப்பட்ட 3.95 மில்லியன் டன் என்ற சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய 2025-26 நிதியாண்டில், ஜனவரி மாதம் வரை துறைமுகம் மொத்தம் 35.97 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது.
இது கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்துடன் (33.94 மில்லியன் டன்) ஒப்பிடும்போது 6% வளர்ச்சி ஆகும். குறிப்பாக, சரக்குப் பெட்டக (Container) கையாளுதலில் 9.40% வளர்ச்சியைப் பதிவு செய்து, 7,16,105 TEUS சரக்குகளைக் கையாண்டுள்ளது.
பல்வேறு முக்கிய சரக்குகள் கையாளுதலில் கட்டுமானப் பொருட்கள்: 92.10%, உரம்: 40.12%, சமையல் எண்ணெய்: 17.52%, தொழிலக நிலக்கரி: 12.78% என குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது
புதிதாக சேர்க்கப்பட்ட உயர்திறன் கொண்ட நகரும் பளுதூக்கிகள் (Harbour Mobile Cranes), வடக்கு சரக்குத் தளம்-3-ன் முழுமையான செயல்பாடுகள், நான்காவது உயர்திறன் இழுவைப் படகு மற்றும் விரிவுபடுத்தப்பட்ட சரக்கு சேமிப்பு வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகளே இந்த சாதனைக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. இது கப்பல்கள் துறைமுகத்தில் தங்கும் நேரத்தை (Turnaround time) வெகுவாகக் குறைத்துள்ளது.
துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் பூரோஹித் கூறுகையில், இந்த வெற்றி துறைமுகத்தின் செயல்திறனையும், பங்குதாரர்களின் அர்ப்பணிப்பையும் காட்டுவதாகவும், வரும் காலங்களில் பசுமை முயற்சிகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூய்மைப் பணியாளரின் நேர்மையை பாராட்டி தங்கச் சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்..!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:40:48 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

பாஜக தேர்தல் சுற்றுப் பயண பொறுப்பாளர் பணியிலிருந்து அண்ணாமலை திடீர் விலகல்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 11:48:54 AM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

எத்தனை சக்திகள் வந்தாலும் தி.மு.க.வை வீழ்த்த த.வெ.க.வால் மட்டுமே முடியும்: விஜய் பேச்சு!
திங்கள் 2, பிப்ரவரி 2026 4:00:39 PM (IST)

