» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓடும் ரயிலில் கல்லூரி மாணவியிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை: நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:07:42 AM (IST)
ஓடும் ரயிலில் கல்லூரி மாணவியிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில், கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி அபினயா. இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது ரயிலில் வந்த வாலிபர் ஒருவர், கண் இமைக்கும் நேரத்தில் அபினயா கழுத்தில் அணிந்திருந்த 10 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துத் தப்பியோடினார்.
இதனைப் பார்த்த சக பயணிகள் அந்த வாலிபரைத் துரத்திப் பிடித்து நெல்லை சந்திப்பு ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் நெல்லை மாவட்டம் தேவர்குளம் வடக்கு தலைவன்பட்டியைச் சேர்ந்த விஜய் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நெல்லை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றம் சாட்டப்பட்ட விஜய்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மகிழ்வண்ணன் ஆஜரானார்.
வழக்கு தொடர்பான ஆவணங்களைச் சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தர உதவியாக இருந்த அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் ஏட்டு சத்யராஜ் ஆகியோரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம்: ரூ.80 லட்சத்தில் சுற்றுவேலி அமைக்கும் பணி தொடக்கம்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 8:05:06 PM (IST)

புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு: தொண்டர்கள் உற்சாகம்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 5:45:53 PM (IST)

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்: தமிழகத்தில் 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!
திங்கள் 16, பிப்ரவரி 2026 4:09:32 PM (IST)

தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் காலவரையற்ற மூடல்: ஊழியர்கள் முடிவு!
திங்கள் 16, பிப்ரவரி 2026 3:18:42 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சி.மதன் பொறுப்பேற்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 12:57:08 PM (IST)

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட நடவடிக்கை : தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் கோரிக்கை!
திங்கள் 16, பிப்ரவரி 2026 11:43:37 AM (IST)

