» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிரச்சினையை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாதவர் விஜய் : எடப்பாடி பழனிசாமி சாடல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:02:27 PM (IST)
ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாதவர் எப்படி மக்களுக்கு நல்லது செய்யப் போகிறார்? என்று தவெக தலைவர் விஜய் மீது எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆம்பூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "2026 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தினால் தான் திமுக அரசு பெண்களுக்கு முன்கூட்டியே உரிமைத் தொகையையும், கோடைக்கால சிறப்புத் தொகையையும் அறிவித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும், அரசியல் ரீதியான விமர்சனங்களை எதிர்கொள்ளும் திறன் தவெக தலைவர் விஜய்க்கு இல்லை என்றும் அவர் சாடினார்.தேர்தல் நேரத்தில் உரிமைத் தொகை நிறுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறுவது பொய். தோல்வி பயத்தால் தற்போது ரூ.5,000 அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டுகளில் வராத 'கோடைக்கால அக்கறை' தேர்தல் வரும்போது மட்டும் ஸ்டாலினுக்கு ஏன் வருகிறது?" என கேள்வி எழுப்பினார்.
விஜய் குறித்த விமர்சனம்: கரூரில் ஒரு பிரச்சினை நடந்தபோது 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராத விஜய், 15 நாட்கள் கட்சி அலுவலகத்தையே மூடிவிட்டார். ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாதவர் எப்படி மக்களுக்கு நல்லது செய்யப் போகிறார்? ஜனநாயக நாட்டில் கேள்வி கேட்பது மக்களின் உரிமை, அதற்கு பதில் சொல்ல வேண்டியது தலைவரின் கடமை என விஜய்யை விமர்சித்தார்.
ஜெயலலிதா கொண்டு வந்த மடிக்கணினி திட்டத்தை முடக்கிவிட்டு, தற்போது தேர்தலுக்காக அதனை திமுக அரசு வழங்குவது மாணவர்களை ஏமாற்றும் செயல் எனத் தெரிவித்தார். அமித் ஷாவை சந்திப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் பங்கேற்ற த.வெ.க. மாநாட்டில் துயரம் : கூட்டத்தில் மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:46:26 PM (IST)

டிஆர்பி தேர்வில் வெற்றிபெற்ற 35 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகள்: அமைச்சர் வழங்கல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:27:08 PM (IST)

திமுகவை பொறுத்தவரை தேர்தல் வெற்றிக்கு மட்டுமே கூட்டணி : விஜய் விமர்சனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:18:51 PM (IST)

சிவாலய ஓட்டம்: கனிமவள லாரிகளுக்கு 2 நாட்கள் தடை - எஸ்பி ஸ்டாலின் உத்தரவு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:38:17 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் மாற்றம் : புதிய எஸ்பியாக மதன் நியமனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:24:31 PM (IST)

தோல்வி பயத்தால் திமுக அரசு ரூ.5000 கொடுத்துள்ளது: ஜெயக்குமார் விமர்சனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 12:15:17 PM (IST)

