» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை : திட்ட வழித்தடம் வெளியீடு!
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 9:18:22 AM (IST)
தூத்துக்குடி - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவது குறித்த அறிவிப்பைத் தேசிய நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது.
இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில், தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாகக் கன்னியாகுமரிக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக நிலங்களை ஆர்ஜிதம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளை மற்றும் ராதாபுரம் தாலுகாக்களில் நிலம் கையகப்படுத்துவது குறித்த அறிவிப்பைத் தேசிய நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள விஜயாபதி, செட்டிகுளம், இருக்கன்துறை (பகுதி-1, பகுதி-2), கூடங்குளம், திருவம்பலாபுரம் மற்றும் திசையன்விளை தாலுகாவில் உள்ள குட்டம், கரைசுத்து உவரி, கரைசுத்து புதூர் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள நிலங்கள், தேசிய நெடுஞ்சாலைச் சட்டப்படி இப்புதிய சாலை அமைக்கும் பணிக்குத் தேவைப்படுகின்றன.
இது தொடர்பான நில விவரங்கள் மற்றும் வரைபடங்களை, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் நேரில் பார்வையிட்டுத் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய 4 வழிச்சாலை திட்ட வழித்தடம் வெளியீடு!
இத்திட்டம் தூத்துக்குடி -திருச்செந்தூர்-கன்னியாகுமரி (NH-32) TTK சாலை என கூறப்படுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 25 கிராமங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் 11 கிராமங்கள் என மொத்தம் சுமார் 106.9 கி.மீ. தொலைவில் புதிதாக 4 வழிச்சாலை திட்டம் அமைகிறது. இதற்காக 853.09 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை அருகில் முடிவைத்தானேந்தல் கிராமத்தில் தொடங்கி கட்டாலங்குளம், நட்டாத்தி, சிறுத்தொண்டநல்லூர், ஆறுமுகமங்கலம், கொட்டாரக்குறிச்சி, வாழவல்லான், சுகந்தலை, சேதுக்குவாய்த்தான். அங்கமங்கலம், நல்லூர், ஆறுமுகநேரி, அம்மன்புரம், மூலக்கரை, நத்தகுளம், கந்தசாமிபுரம், மேல திருச்செந்தூர், கீழ திருச்செந்தூர், குலசை, உடன்குடி, ஆதியாக்குறிச்சி, பள்ளக்குறிச்சி, படுக்கப்பத்து, திருப்பணி புத்தன்தருவை, நெல்லை மாவட்டத்தின் குட்டம், உவரி, கரைச்சுத்து புதூர், கூடங்குளம், இருக்கன்துறை 1,2, லெவிஞ்சிபுரம் வழியாக அஞ்சுகிராமத்திற்கு சற்று முன்னதாக கருங்குளத்தில் நெல்லை - கன்னியாகுமரி 4 வழிச்சாலை திட்டத்தில் இணைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் தற்போது முதற்கட்டமாக நெடுஞ்சாலைத்துறை சாலை அமைக்கப்படும் வழித்தடம் குறித்து வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து 21 நாட்களுக்குள் பொது மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு அறிவிக்கப் பட்டுள்ளது. அதன் பிறகு நிலம் கையகப்படுத்துவதற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு அதனை தொடர்ந்து வழித்தட கற்கள் பதிக்கப்பட உள்ளது. இப்பணிகள் நிறைவடைந்த பிறகு சாலை அமைக்கும் பணி தொடங்க உள்ளது. இத்திட்டத்தால் பயண நேரம் மற்றும் தூரம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம்: ரூ.80 லட்சத்தில் சுற்றுவேலி அமைக்கும் பணி தொடக்கம்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 8:05:06 PM (IST)

புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு: தொண்டர்கள் உற்சாகம்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 5:45:53 PM (IST)

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்: தமிழகத்தில் 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!
திங்கள் 16, பிப்ரவரி 2026 4:09:32 PM (IST)

தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் காலவரையற்ற மூடல்: ஊழியர்கள் முடிவு!
திங்கள் 16, பிப்ரவரி 2026 3:18:42 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சி.மதன் பொறுப்பேற்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 12:57:08 PM (IST)

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட நடவடிக்கை : தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் கோரிக்கை!
திங்கள் 16, பிப்ரவரி 2026 11:43:37 AM (IST)

