» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மது போதையில் ஆட்டோ ஓட்டி 5 பள்ளி மாணவர்கள் காயம் : ஓட்டுநர் மீது கடும் பிரிவில் வழக்கு
புதன் 18, பிப்ரவரி 2026 5:53:22 PM (IST)
கல்லிடைகுறிச்சி அருகே மது போதையில் ஆட்டோ ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் மீது, சாதாரண அஜாக்கிரதை வழக்கு என்று இல்லாமல், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கக்கூடிய கடுமையான பிரிவின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த 17.02.2026 அன்று மாலை, கல்லிடைகுறிச்சி கோட்டைவிளை தெருவைச் சேர்ந்த சந்தான பாரதி (31) என்பவர், தனது ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். ஆத்தியடி விலக்கு அருகே சென்றபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ஐந்து பள்ளி குழந்தைகள் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு கல்லிடைகுறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில், ஆட்டோ ஓட்டுநர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. தான் குடிபோதையில் இருப்பதால் வாகனத்தை முறையாக இயக்க முடியாது என்பதும், அதனால் குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதும் தெரிந்தே அவர் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
காயமடைந்த ஒரு குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில், கொலையாகாத மரணம் விளைவிக்கின்ற குற்ற முயற்சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் சந்தான பாரதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
பொதுவாக மது போதையில் விபத்து ஏற்படுத்தினால் 'அஜாக்கிரதை' என்று சாதாரண வழக்கு பதியப்படும். ஆனால், தற்போது பிறர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்தே செய்யும் இத்தகைய செயல்கள், கடுமையான பிரிவுகளின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.
தண்டனை விவரம்: இக்குற்றத்திற்காக அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. "மது போதையில் வாகனம் ஓட்டுவது சமூகத்திற்கு எதிரான, பிறர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கொடிய செயல். பொதுமக்கள் சட்டப்படி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பிரசண்ண குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியத் துறைமுக வரலாற்றில் மைல்கல்: வ.உ.சி. துறைமுக ஆணையம் சார்பில் ஏஐ அமர்வு!
புதன் 18, பிப்ரவரி 2026 5:22:09 PM (IST)

துபாயில் வேலை என ஆசை காட்டி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 4:55:56 PM (IST)

திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவி மீதே தாக்குதல்: காவல்துறைக்கு இபிஎஸ் கண்டனம்!
புதன் 18, பிப்ரவரி 2026 3:41:47 PM (IST)

நடுரோட்டில் கொதிக்கும் எண்ணெய்.. ஆக்கிரமிப்பு பிடியில் விளாத்திகுளம் சாலைகள்: கிராம மக்கள் அவதி!
புதன் 18, பிப்ரவரி 2026 3:22:22 PM (IST)

நீதிமன்றத்தில் அண்ணாமலை குறுக்கு விசாரணை: 2 கப்பல்கள் வாங்கியதை ஒத்துக்கொண்ட டி.ஆர்.பாலு!
புதன் 18, பிப்ரவரி 2026 11:29:00 AM (IST)

ஆட்சியில் பங்கு என்பது குறித்து தலைமையிடம் ஏற்கெனவே பேசிவிட்டேன்: மாணிக்கம் தாகூர்
புதன் 18, பிப்ரவரி 2026 11:20:32 AM (IST)

