» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 13,76,624 வாக்காளர்கள் : 9,626 நபர்கள் நீக்கம்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 10:40:50 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 6,71,742 ஆண் வாக்காளர்களும், 7,04,689 பெண் வாக்காளர்களும், 193 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 13,76,624 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் இளம்பகவத் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் மொத்தம் 13,76,624 வாக்காளர் இடம் பெற்றுள்ளனர்.
விளாத்திகுளம் தொகுதியில் 2,03,732 வாக்காளர்களும், தூத்துக்குடி தொகுதியில் 2,48,300 வாக்காளர்களும் உள்ளனர். திருச்செந்தூர் தொகுதியில் 2,30,702 நபர்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2,12,885 நபர்களும் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 2,40,988 வாக்காளர்களும், கோவில்பட்டி தொகுதியில் 2,40,017 வாக்காளர்களும் உள்ளனர்.
9,626 நபர்கள் நீக்கம்
சிறப்பு தீவிர திருத்தப்பணியின் போது, இறந்தவர்கள் மற்றும் முகவரி மாறிச் சென்றவர்கள் என மொத்தம் 9,626 நபர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நீக்கங்கள் 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டன. பெறப்பட்ட படிவம்-7 விண்ணப்பங்களின் (நீக்கம் கோருதல்) அடிப்படையில் கள விசாரணை செய்யப்பட்டு இந்த இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
பெண் வாக்காளர்கள் அதிகம்
ஒட்டுமொத்தமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 6,71,742 ஆண் வாக்காளர்களும், 7,04,689 பெண் வாக்காளர்களும், 193 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 13,76,624 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் பாலின வாரியாகப் பார்க்கும்போது, பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விடக் கூடுதலாக உள்ளது. மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 6,78,752 பெண் வாக்காளர்களும், 6,49,224 ஆண் வாக்காளர்களும், 182 இதர பாலினத்தவரும் இடம் பெற்றுள்ளனர்.
1. விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 97,273 ஆண்கள், 1,00,660 பெண்கள் 14 இதரர் என மொத்தம் 1,97,947 வாக்காளர்கள் உள்ளனர்.
2. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,15,136 ஆண்கள், 1,21,263 பெண்கள் 62 இதரர் என மொத்தம் 2,36,461 வாக்காளர்கள் உள்ளனர்.
3. திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,08,526 ஆண்கள், 1,14,077 பெண்கள், 28 இதரர் என மொத்தம் 2,22,631 வாக்காளர்கள் உள்ளனர்.
4. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,02,364 ஆண்கள் 1,04,688 பெண்கள், 2 இதரர் என மொத்தம் 2,07,054 வாக்காளர்கள் உள்ளனர்.
5. ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,13,480 ஆண்கள், 1,19,002 பெண்கள், 54இதரர் என மொத்தம் 2,32,536 வாக்காளர்கள் உள்ளனர்.
6. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1,12,445 ஆண்கள், 1,19,062 பெண்கள், 22 இதரர் என மொத்தம் 2,31,529 வாக்காளர்கள் உள்ளனர்.
தொகுதிகளின் வாரியாகப் பார்க்கையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி 2,36,461 வாக்காளர்களுடன் மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 2,32,536 வாக்காளர்களும், கோவில்பட்டி தொகுதியில் 2,31,529 வாக்காளர்களும் உள்ளனர். திருச்செந்தூர் தொகுதியில் மொத்தம் 2,22,631 வாக்காளர்கள் உள்ள நிலையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2,07,054 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்திலேயே குறைந்தபட்சமாக விளாத்திகுளம் தொகுதியில் 1,97,947 வாக்காளர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு தொகுதியிலும் பெண்களின் ஆதிக்கமே அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடி தொகுதியில் அதிகபட்சமாக 1,21,263 பெண் வாக்காளர்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 54 இதர பாலினத்தவரும் உள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இதர பாலினத்தவர் எண்ணிக்கை மிகக் குறைவாக 2 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது கருத்துக்கள் இருப்பின், அவற்றை வரும் 25-02-2026-க்குள் தெரிவிக்குமாறு பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக வாக்குச்சாவடி மறுவரையறை தொடர்பான திட்டங்கள் குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா. கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷீ மங்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் மி.பிரபு (கோவில்பட்டி) ஆர்.கௌதம் (திருச்செந்தூர்). துணை ஆட்சியர் (பயிற்சி) மகேந்திரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 23, பிப்ரவரி 2026 9:06:08 PM (IST)

சென்னை - தூத்துக்குடி இடையே கூடுதல் விமான சேவை: மார்ச் 29ல் தொடக்கம் - இன்டிகோ அறிவிப்பு !
திங்கள் 23, பிப்ரவரி 2026 8:24:24 PM (IST)

தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்: 4.23 லட்சம் பெயர்கள் நீக்கம்
திங்கள் 23, பிப்ரவரி 2026 5:14:37 PM (IST)

இது எனக்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான போர் : வேலூரில் விஜய் ஆவேசப் பேச்சு
திங்கள் 23, பிப்ரவரி 2026 3:41:57 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.10 லட்சம் வாக்காளர்கள்: இறுதி பட்டியல் வெளியீடு
திங்கள் 23, பிப்ரவரி 2026 3:31:34 PM (IST)

முதல்வர் வருகை எதிரொலி: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; ட்ரோன்கள் பறக்க தடை!
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:20:11 PM (IST)

