» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.26.50 லட்சம் மோசடி: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!
புதன் 25, பிப்ரவரி 2026 9:23:53 PM (IST)
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அன்பு நகரைச் சேர்ந்த சிவராமன் (65) என்பவர், கடந்த 2023-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களிடம் அறிமுகமாகியுள்ளார். அவர்களுக்குத் இந்திய இரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, நம்பவைத்து மொத்தம் ரூபாய் 26,50,000/- பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார்.இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு-I போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-IV-ல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ், சிவராமன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 8,000/- அபராதம் விதித்து இன்று (25.02.2026) தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த மாவட்ட குற்றப்பிரிவு - I காவல் துணை கண்காணிப்பாளர் மயில்சாமி மற்றும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த மாவட்ட குற்றப்பிரிவு - I காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா, அப்போதைய உதவி ஆய்வாளர் அனிதா, நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் (பொறுப்பு) முருகப்பெருமாள், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் வைரமணி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயிலில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 25, பிப்ரவரி 2026 8:22:12 PM (IST)

தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்தது தனியார் பால் விலை: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!
புதன் 25, பிப்ரவரி 2026 5:16:51 PM (IST)

முதுகில் குத்தினார்கள்; 9 ஆண்டு காலம் காத்திருந்தேன்: இபிஎஸ் மீது சசிகலா கடும் தாக்கு
புதன் 25, பிப்ரவரி 2026 4:43:18 PM (IST)

நல்லகண்ணு வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை: முதல்வர் இரங்கல்
புதன் 25, பிப்ரவரி 2026 4:11:46 PM (IST)

வைகுண்டசாமி பிறந்த நாள்: மார்ச் 4-ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
புதன் 25, பிப்ரவரி 2026 3:24:30 PM (IST)

முதுபெரும் கம்யூனிச தலைவர் நல்லகண்ணு காலமானார்
புதன் 25, பிப்ரவரி 2026 3:12:05 PM (IST)

