» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது : 19,076 பேர் பங்கேற்பு
திங்கள் 2, மார்ச் 2026 10:46:46 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது. இன்றைய தேர்வில் 19,076 பேர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று (02.03.2026) தொடங்கின. இது குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இத்தேர்வுகள் மார்ச் 02 முதல் மார்ச் 26 வரை நடைபெறவுள்ளன. மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 93 மையங்களில் 8,547 மாணவர்கள் மற்றும் 10,724 மாணவிகள் என மொத்தம் 19,271 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
முதல் நாள் தேர்வில் 8,435 மாணவர்கள் மற்றும் 10,641 மாணவிகள் என மொத்தம் 19,076 பேர் பங்கேற்றனர். ஒட்டுமொத்த வருகை சதவீதம் 99% ஆகும். அனைத்து மையங்களிலும் குடிநீர், கழிப்பறை, தடையில்லா மின்சாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குத் தரைதள அறைகள் மற்றும் சொல்வதை எழுதுபவர் வசதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசித்திருவிழா: இரட்டை திருப்பதியில் சாத்துமுறை வைபவம் கோலாகலம்
புதன் 11, மார்ச் 2026 8:31:03 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரை மிரட்டிவிட்டு தப்பிய மர்ம நபர்கள்: போலீசார் தீவிர விசாரணை
புதன் 11, மார்ச் 2026 8:27:39 AM (IST)

சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:26:06 PM (IST)

கோவில் சொத்துக்களும் உருக்கிய தங்கமும் எங்கே? - சேகர்பாபுவுக்கு அண்ணாமலை சரமாரி கேள்விகள்!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:02:52 PM (IST)

தென்னிந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசு தலையிட கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
செவ்வாய் 10, மார்ச் 2026 3:49:14 PM (IST)

எரிபொருள் தட்டுப்பாடு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:26:34 PM (IST)

