» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விவசாய நிலங்களை அழித்து 4 வழிச்சாலை அமைப்பதா? கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!
திங்கள் 2, மார்ச் 2026 12:30:21 PM (IST)

தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி இடையேயான புதிய நான்கு வழிச்சாலைத் திட்டத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூலக்கரை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
கடந்த 08.02.2026 அன்று நாளிதழ்களில் வெளியான அறிவிப்பின்படி, மூலக்கரை, அம்மன்புரம் மற்றும் நத்தகுளம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து கிராம மக்கள் தெரிவித்துள்ள முக்கியக் கவலைகள் பின்வருமாறு: இத்திட்டத்தினால் சுமார் 1250 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் முற்றிலுமாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அணையின் தென்கால் பாசனத்தைப் பெறும் சீனமாவடி குளம், நத்தைக்குளம், நாலாயிரமுடையார் குளம் உள்ளிட்ட 8 குளங்களின் பாசனப் பரப்புகள் பாதிக்கப்படும். நான்கு வழிச்சாலை அமைப்பதால் கிராமத்தின் முக்கிய வடிகால் வாய்க்கால்கள் சேதமடையும். இதனால் மூலக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என மக்கள் அஞ்சுகின்றனர்.
தற்போது திட்டமிடப்பட்டுள்ள பாதையானது விளைநிலங்கள் வழியாகச் செல்வதால், அதனைத் தவிர்த்து வண்டிப்பாதை வழியாகவோ அல்லது ஆறுமுகநேரி கிராமம் புதுக்குளத்தின் கீழ்ப்புற கரைப்பாதை வழியாகவோ அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
"அரசு நிர்ணயித்துள்ள தற்போதைய பாதையை மாற்றி அமைப்பதன் மூலம் விவசாய நிலங்களைக் காக்க முடியும். அதே சமயம் அரசுக்கும் பணித் தொய்வு ஏற்படாமல் ஒரு நல்ல மாற்றுத் தீர்வாக இது அமையும்" என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசித்திருவிழா: இரட்டை திருப்பதியில் சாத்துமுறை வைபவம் கோலாகலம்
புதன் 11, மார்ச் 2026 8:31:03 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரை மிரட்டிவிட்டு தப்பிய மர்ம நபர்கள்: போலீசார் தீவிர விசாரணை
புதன் 11, மார்ச் 2026 8:27:39 AM (IST)

சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:26:06 PM (IST)

கோவில் சொத்துக்களும் உருக்கிய தங்கமும் எங்கே? - சேகர்பாபுவுக்கு அண்ணாமலை சரமாரி கேள்விகள்!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:02:52 PM (IST)

தென்னிந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசு தலையிட கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
செவ்வாய் 10, மார்ச் 2026 3:49:14 PM (IST)

எரிபொருள் தட்டுப்பாடு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:26:34 PM (IST)

