» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விவசாயிகளின் பிள்ளைகளுக்கு இலவச உயர்கல்வி: : தஞ்சையில் விஜய் அதிரடி வாக்குறுதி
புதன் 4, மார்ச் 2026 5:51:53 PM (IST)

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் மற்றும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசினார்.
தஞ்சை மண்ணின் பெருமையை பறைசாற்றும் விதமாகப் பச்சை நிறத் துண்டு அணிந்து உரையாற்றிய அவர், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கான முக்கிய வாக்குறுதிகளைப் பட்டியலிட்டார்.
விஜய் அறிவித்த வாக்குறுதிகள்:
கடன் ரத்து: 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும். அதற்கு மேல் நிலம் உள்ளவர்களுக்கு 50% கடன் ரத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உர விநியோகம்: உரம் பதுக்கப்படுவதைத் தடுத்து, தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
நெல் கொள்முதல்: நெல் கொள்முதல் நிலையங்களில் கமிஷன் வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; ஒரு பைசா கூட கமிஷன் இல்லாத நிர்வாகம் உறுதி செய்யப்படும்.
எதிர்ப்பு: ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்தாலும், விவசாயிகளுக்கு எதிரான எந்தவொரு திட்டத்தையும் தவெக அரசு அனுமதிக்காது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு: முழு படிப்புச் செலவு: 2 ஏக்கர் வரை நிலம் உள்ளவர்கள் மற்றும் நிலமற்ற விவசாயிகளின் பிள்ளைகள், அரசுப் பணியில் இல்லாத பட்சத்தில், அவர்களது பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும்.
வேலைவாய்ப்பு: அரசுப் பணிகள் மட்டுமின்றி, தனியார் துறை வேலைவாய்ப்புகளுக்கும் உரிய உத்தரவாதம் வழங்கப்படும்.
ரேஷன் மற்றும் அடிப்படை வசதிகள்:
அருகாமை ரேஷன் கடை: பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில், 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும்.
தரமான விநியோகம்: அரிசி தவிர மற்ற ரேஷன் பொருட்கள் அனைத்தும் பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகிக்கப்படும்.
முன்னுரிமை: கல்வி, மருத்துவம், குடிநீர் மற்றும் பேருந்து வசதி போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே தவெக ஆட்சியில் முதல் முன்னுரிமை அளிக்கப்படும்.
நிர்வாக வெளிப்படைத்தன்மை:திமுக அரசை விமர்சித்துப் பேசிய விஜய், "தகுதி பார்த்துப் பாகுபாடு காட்டாமல், அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் வெளிப்படையாகச் செயல்படுத்தப்படும். வெறும் விளம்பரம் செய்யாமல், உண்மையான ஒப்பந்தங்கள் மூலம் வெள்ளை அறிக்கை வெளியிட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்" என்றார்.
கூட்டத்தின் இறுதியில், "எங்கள் ஓட்டு விலைக்கு அல்ல; எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கே" என்ற உறுதிமொழியைத் தொண்டர்களுடன் இணைந்து அவர் ஏற்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யுத்த வெறி பிடித்த அமெரிக்கா, இஸ்ரேலைக் கண்டித்து தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
வியாழன் 5, மார்ச் 2026 8:15:26 PM (IST)

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:30:14 PM (IST)

தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் யார் யார்? முழு விவரம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:23:08 PM (IST)

ஒட்டுமொத்த தமிழக மக்களின் நிம்மதியே முடிந்து விட்டது: இ.பி.எஸ் கடும் தாக்கு!
வியாழன் 5, மார்ச் 2026 3:14:09 PM (IST)

திமுக - காங்கிரஸ் கூட்டணி புதிய வரலாறு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
வியாழன் 5, மார்ச் 2026 11:23:06 AM (IST)

