» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!
வெள்ளி 13, மார்ச் 2026 12:10:01 PM (IST)
எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகச் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற வதந்தியால், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் திரண்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க, தமிழக அரசும் எண்ணெய் நிறுவனங்களும் விளக்கமளித்துள்ளன.
தமிழகத்தில் உள்ள 14 முனையங்களில் அடுத்த 21 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளது. இந்தியா முழுவதும் 90 நாட்களுக்குத் தேவையான பெட்ரோல், டீசல் கையிருப்பில் உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 7,000 பெட்ரோல் பங்க்குகளிலும் எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக வாங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வாங்குவது மிகவும் ஆபத்தானது என்பதால், அவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு வரும் என்ற அச்சத்தில், சென்னையில் பலர் தங்களது வாகனங்களை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டுச் சென்றனர். இதனால் ஆலந்தூர், கோயம்பேடு உள்ளிட்ட நிலையங்களில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டது.
இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்: "மத்திய அரசின் சார்பில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ, பதற்றமடையவோ வேண்டாம். எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகம் குறித்துப் பிரதமருக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது."
கடும் எச்சரிக்கை: எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகச் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் காவல்துறை எச்சரித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமி படுகொலை: குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் - கனிமொழி எம்.பி. உறுதி!
வெள்ளி 13, மார்ச் 2026 12:40:01 PM (IST)

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!
வெள்ளி 13, மார்ச் 2026 12:13:57 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி 668-வது நாளாக பொட்டலூரணி மக்கள் போராட்டம்!
வெள்ளி 13, மார்ச் 2026 10:28:37 AM (IST)

வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
வெள்ளி 13, மார்ச் 2026 8:40:03 AM (IST)

திருச்செந்தூர் கோவிலுக்கு மீண்டும் சுற்றுப்பேருந்து இயக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி!
வெள்ளி 13, மார்ச் 2026 8:08:09 AM (IST)

திமுகவின் மிரட்டலால் ரஜினி பின்வாங்கினார்; ஆனால் விஜய் அஞ்சமாட்டார்! - ஆதவ் அர்ஜுனா
வியாழன் 12, மார்ச் 2026 5:45:26 PM (IST)

