» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கிணற்றில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு : கோவில்பட்டி அருகே சோகம்

திங்கள் 23, மார்ச் 2026 8:08:23 AM (IST)

கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சரமாரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் மனோஜ் (17). இவர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, கோவில்பட்டி - கடலையூர் சாலையில் லிங்கம்பட்டி விலக்கு அருகேயுள்ள ஒரு தனியார் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.

நண்பர்களுடன் உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தபோது, மனோஜ் திடீரென கிணற்றின் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், உடனடியாகத் தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள், கிணற்றில் இறங்கி நீண்ட நேரம் தேடினர். இறுதியில் மனோஜின் உடலைச் சடலமாக மீட்டனர். நாலாட்டின்புதூர் போலீசார் மனோஜின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீர்நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தல்

விபத்து நடந்த இடத்தை கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜகநாதன் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பாதுகாப்பு வசதிகள் இல்லாத கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory