» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ‘துரந்தர் 2’ படத்தைத் தடை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

திங்கள் 23, மார்ச் 2026 5:04:07 PM (IST)



நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள ‘துரந்தர் 2’  திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங், சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'துரந்தர் 2'. இத்திரைப்படம் கடந்த மார்ச் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழகத் திரையரங்குகளில் இத்திரைப்படத்தைத் திரையிடத் தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் ஷீலா என்பவர் அவசர முறையீடு செய்தார்.

அவர் தனது முறையீட்டில், "தமிழகத்தில் கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. 'துரந்தர் 2' திரைப்படத்தில் அரசியல் தொடர்பாகவும், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகவும் கருத்துகள் அதிகம் பேசப்பட்டுள்ளன. எனவே, தேர்தல் முடியும் வரை இப்படத்தைத் தமிழகத் திரையரங்குகளில் திரையிடத் தடை விதிக்க வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு இப்படத்தை வெளியிட அனுமதிக்கலாம்" என்று கோரிக்கை வைத்தார்.

இந்த முறையீட்டைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, திரைப்படம் ஏற்கனவே வெளியாகிவிட்டதால், இதனைத் தனியாக மனுவாகத் தாக்கல் செய்துவிட்டு முறையீடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory