» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா குளிர்சாதனப் பெட்டி: இபிஎஸ் வாக்குறுதி!

செவ்வாய் 24, மார்ச் 2026 5:29:01 PM (IST)

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 24) வெளியிட்டார். ஏற்கெனவே 3 கட்டங்களாக 16 வாக்குறுதிகளை அறிவித்திருந்த நிலையில், முழுத் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 28 ஆண்டுகள் அதிமுகவை கட்டிக்காத்தவர் ஜெயலலிதா. 7.5% இடஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உள்ளிட்டவை அதிமுக கொண்டுவந்தவை. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றி ஆட்சி செய்துவந்த திமுகவை அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்.

அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்

குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்.

ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி.

மகளிக்கு மாதம் ரூ. 2000 ஊக்கத் தொகை

5 லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனம்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory