» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு: கூட்டணிக் கட்சிகள் தொகுதிகள் முழு விவரம்!

புதன் 25, மார்ச் 2026 3:52:25 PM (IST)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் அதிகாரப்பூர்வப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை

பாரதிய ஜனதா கட்சி 27

பாட்டாளி மக்கள் கட்சி 18

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 11

தமிழ் மாநில காங்கிரஸ் 5

இந்திய ஜனநாயகக் கட்சி 2

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1

புரட்சி பாரதம் 1

கட்சிகள் வாரியாகப் போட்டியிடும் தொகுதிகளின் முழுப் பட்டியல்:

1. பாரதிய ஜனதா கட்சி (பாஜக) - 27 தொகுதிகள்

பாஜக போட்டியிடும் தொகுதிகளின் விவரம்:

மயிலாப்பூர்

தளி

மொடக்குறிச்சி

உதகமண்டலம்

அவினாசி (தனி)

திருப்பூர் தெற்கு

கோவை வடக்கு

கந்தர்வக்கோட்டை (தனி)

புதுக்கோட்டை

திருப்பத்தூர்

மதுரை தெற்கு

சாத்தூர்

திருச்செந்தூர்

வாசுதேவநல்லூர் (தனி)

ராதாபுரம்

நாகர்கோவில்

விளவங்கோடு

ஆவடி

திருவண்ணாமலை

தஞ்சாவூர்

திருவாரூர்

அறந்தாங்கி

மானாமதுரை (தனி)

ராமநாதபுரம்

குளச்சல்

பத்மநாபபுரம்

ராசிபுரம் (தனி)

2. பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) - 18 தொகுதிகள்

பாமக போட்டியிடும் தொகுதிகளின் விவரம்:

சேலம் மேற்கு

சேலம் வடக்கு

தருமபுரி

பென்னாகரம்

விக்கிரவாண்டி

சோளிங்கர்

திருப்போரூர்

உத்திரமேரூர்

ஜெயங்கொண்டம்

விருதாச்சலம்

மயிலாடுதுறை

செஞ்சி

போளூர்

கீழ் வேளூர் (தனி)

ரிஷிவந்தியம்

காட்டுமன்னார்கோயில் (தனி)

பெரம்பூர்

அம்பத்தூர்

3. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) - 11 தொகுதிகள்

அமமுக போட்டியிடும் தொகுதிகளின் விவரம்:

பெரியகுளம் (தனி)

மன்னார்குடி

திருவையாறு

காரைக்குடி

திருப்பத்தூர்

நாங்குநேரி

ஒட்டபிடாரம் (தனி)

திருச்சி மேற்கு

சைதாப்பேட்டை

பூந்தமல்லி (தனி)

மடத்துகுளம்

4. தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) - 5 தொகுதிகள்

ஒட்டன்சத்திரம்

ஈரோடு மேற்கு

ராணிப்பேட்டை

கிள்ளியூர்

கும்பகோணம்

5. இதர கூட்டணிக் கட்சிகள்

ஐஜேகே (2 தொகுதிகள்): பல்லாவரம், குன்னம்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (ஜான் பாண்டியன்): ராஜபாளையம்

புரட்சி பாரதம் (பூவை ஜெகன் மூர்த்தி): கீழ்வைத்தியனான்குப்பம் (K.V. குப்பம்)

கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள தொகுதிகளில் அதிமுக நேரடியாகக் களம் காண்கிறது. தேர்தல் நெருங்கும் வேளையில் இந்தக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory