» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிரடி: இதுவரை ரூ.28.58 லட்சம் பறிமுதல்!
வியாழன் 26, மார்ச் 2026 5:10:34 PM (IST)
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.28.58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 15.03.2026 முதல் இன்று (26.03.2026) காலை 6:00 மணி வரையிலான சோதனையில் மொத்தம் ரூ.28,58,410 உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதற்காகக் கைப்பற்றப்பட்டுள்ளது.
தொகுதி வாரியான விவரங்களைப் பார்க்கையில், அதிகபட்சமாக குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் ரூ.8,69,150 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கிள்ளியூர் தொகுதியில் ரூ.6,90,790-ம், விளவங்கோடு தொகுதியில் ரூ.5,49,370-ம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாகர்கோவில் தொகுதியைப் பொறுத்தவரை, நேற்று மாலை வரை ரூ.3,75,350 பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 12 மணி நேரச் சோதனையில் கூடுதலாக ரூ.55,050 பிடிபட்டுள்ளது. இதன் மூலம் நாகர்கோவில் தொகுதியில் மட்டும் மொத்தம் ரூ.4,30,400 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர, கன்னியாகுமரி தொகுதியில் ரூ.2,49,700-ம், பத்மனாபபுரம் தொகுதியில் ரூ.69,000-ம் இதுவரை பிடிபட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில் இந்தப் பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி : விஜய் அறிக்கை
வியாழன் 26, மார்ச் 2026 5:46:08 PM (IST)

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் தர மாட்டோம் : சீமான் பிரச்சாரம்!
வியாழன் 26, மார்ச் 2026 4:39:58 PM (IST)

சமூக ஊடகங்களில் கண்ணியம் காக்க வேண்டும்: ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தல்!
வியாழன் 26, மார்ச் 2026 4:14:26 PM (IST)

தவெக விழாவில் நடனமாடிய தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்: : கல்வி அலுவலர் நடவடிக்கை!
வியாழன் 26, மார்ச் 2026 4:06:05 PM (IST)

தூத்துக்குடியில் குடிபோதையில் டேங்கர் லாரி ஓட்டிய ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு – உரிமம் ரத்து!
வியாழன் 26, மார்ச் 2026 3:39:54 PM (IST)

பங்குனி உத்திரம்: தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்.1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிக்கை!
வியாழன் 26, மார்ச் 2026 3:29:27 PM (IST)

