» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்: புதிய தமிழகம் தனித்துப் போட்டி - கிருஷ்ணசாமி அறிவிப்பு!
வெள்ளி 27, மார்ச் 2026 8:43:47 AM (IST)
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்த நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கோவை குனியமுத்தூரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது: 2019 மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தோம். வரும் தேர்தலில் அதிமுகவிடம் 12 முதல் 15 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட் கோரினோம்.
அதிமுக தரப்பில் முதலில் 7 தொகுதிகள் தருவதாகக் கூறி, பின்னர் அதனை 5 ஆகக் குறைத்தனர். எடப்பாடி பழனிசாமியுடன் நடத்திய பலகட்டப் பேச்சுவார்த்தைகளிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. தேவேந்திர குல வேளாளர் மக்கள் அதிமுகவால் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்து மனவேதனையில் உள்ளனர். எனவே, தற்போதைய சூழலில் அதிமுக உடனான பேச்சுவார்த்தை முற்றுப் பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் 70 தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது. 21 மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தனித்துப் போட்டியிடுவதன் மூலம் 10 முதல் 12 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
இருப்பினும், தாங்கள் கேட்ட தொகுதிகளை மீண்டும் ஒதுக்க முன்வந்தால், தனித்துப் போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாகவும் டாக்டர் கிருஷ்ணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தீவிரம்: இதுவரை ரூ.30.48 லட்சம் பறிமுதல்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:50:33 PM (IST)

விஜய் முதலில் மன்னிப்பு கேட்கட்டும்: 5 கேள்விகளை எழுப்பி பொன்ராஜ் பதிலடி!
வெள்ளி 27, மார்ச் 2026 12:09:45 PM (IST)

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு: கடும் எதிர்ப்பால் மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்!
வெள்ளி 27, மார்ச் 2026 11:36:58 AM (IST)

அண்ணா பல்கலை. மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை: அண்ணாமலை கடும் கண்டனம்
வெள்ளி 27, மார்ச் 2026 11:28:05 AM (IST)

தவெக பெண்கள் குறித்து பொன்ராஜ் சர்ச்சை பேச்சு: டிஜிபி அலுவலகத்தில் விஜய் புகார்!
வெள்ளி 27, மார்ச் 2026 10:37:27 AM (IST)

தூத்துக்குடி டூ கொல்கத்தா: முதன்முறையாக ரயிலில் பறந்தது பட்டாணி - மதுரை கோட்டம் புதிய சாதனை!
வெள்ளி 27, மார்ச் 2026 8:08:36 AM (IST)

