» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகளிர் அணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை : தவெக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு!

செவ்வாய் 31, மார்ச் 2026 10:34:20 AM (IST)

தவெக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அக்கட்சியின் பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தவெகவின் வேட்பாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டனர். பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினராக குட்டி என்கிற பிரகாசம் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், தவெக வேட்பாளர் குட்டி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக மகளிர் அணியைச் சேர்ந்த பெண், கட்சித் தலைமையில் புகார் கொடுத்து 6 மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்காத நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பாக வெளியே யாரிடமாவது கூறினால் கூலிப்படை மூலம் குடும்பத்தையே கொன்று விடுவேன் என்று குட்டி மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தவெக வேட்பாளர் குட்டி மீது பாலியல் தொல்லை உள்பட 6 பிரிவுகளின் கீழ் திருவள்ளூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே, பதவி கொடுக்காததால் தனது கணவர் மீது பொய் குற்றச்சாட்டு அளிக்கப்பட்டுள்ளதாக குட்டியின் மனைவி நேற்று திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory