» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கேஸ் சிலிண்டர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு: ஆட்சியர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்!
புதன் 1, ஏப்ரல் 2026 5:37:24 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கேஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாக்காளர்கள் மத்தியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமையான முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தலைமை தாங்கினார். பொதுமக்கள் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு உருளைகளின் மீது, "100% தவறாமல் வாக்களிப்போம்" மற்றும் "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" போன்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஆட்சியர் ஒட்டி தொடங்கி வைத்தார்.
கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியாளர்களிடம் இந்த ஒட்டு வில்லைகளை வழங்கிய ஆட்சியர், ஒவ்வொரு வீட்டிற்கும் சிலிண்டர் கொண்டு செல்லும் போது வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர், தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் எரிவாயு முகமை பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காய், கனிகளால் ஜொலிக்கும் தேர்தல் விழிப்புணர்வு: கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:06:12 PM (IST)

மனைவியுடன் தகராறு : சமோசா வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 11:56:27 AM (IST)

அனுத்தொகை மங்கலம்: கடல் கொண்ட பாண்டிய நாட்டுப் பெருநகரின் மர்மம்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 11:07:27 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக விஷு மகாஜன் பொறுப்பேற்பு
வெள்ளி 3, ஏப்ரல் 2026 10:54:10 AM (IST)

கழுகுமலை கோவிலில் திருக்கல்யாண வைபவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:54:10 AM (IST)

பராமரிப்புப் பணிகளால் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:37:23 AM (IST)

