» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் தேர்தல் விழிப்புணர்வு : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு

வியாழன் 2, ஏப்ரல் 2026 4:32:17 PM (IST)



புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, SVEEP (Systematic Voters’ Education and Electoral Participation) திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆர்.அழகுமீனா இன்று (02.04.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், "சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசியதாவது: "இந்தியத் திருநாட்டில் குடிமக்களாகிய நமக்குக் கிடைத்துள்ள மாபெரும் உரிமையான வாக்குரிமையை நாம் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த 15,10,550 வாக்காளர்களும், வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும். நமது மாவட்டம் 100 சதவீத வாக்குப்பதிவை எட்டிய மாவட்டமாகத் திகழ வேண்டும் என்பதே மாவட்ட நிர்வாகத்தின் நோக்கம்.

இந்த இலக்கை அடைய அனைத்துத் துறையினர், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ-மாணவியர் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்துத் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் மாத்தூர் தொட்டிப்பால முகப்பில் அனைவரும் அறியும் வண்ணம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிட வேண்டும் என்றார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, பத்மநாபபுரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருவட்டார் வட்டாட்சியர் மரகதவல்லி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory