» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: ஏப்ரல் 21-ல் கொடியேற்றம்; 30-ல் தேரோட்டம்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 11:06:19 AM (IST)

தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கால்நாட்டு வைபவம் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதப் பெருந்திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற ஏப்ரல் 21-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி, முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, திருவிழாவின் தொடக்க நிகழ்வான கால்நாட்டு விழா கோவில் முன்பாக நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவின் போது, நவதானியங்களை மண்ணில் இட்டு மங்கலப் பொருட்கள் முழங்க கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்பாளுக்குச் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் காட்டப்பட்டன. இதற்கான பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் செல்வம் மற்றும் சண்முகம் பட்டர்கள் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, ஆய்வாளர் ருக்மணி, மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, பி.எஸ்.கே. ஆறுமுகம், சாந்தி, ரமேஷ் கிருஷ்ணன், நெல்லையப்பன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவுக்கான முன்னேற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - தாம்பரம் இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள்: ஏப். 20 முதல் இயக்கம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:11:58 PM (IST)

தமிழகத்தில் 300% வன்கொடுமைகள் அதிகரிப்பு: விளாத்திகுளத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:15:07 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தேரோட்டம்: அச்சுத்தடி உடைந்ததால் பரபரப்பு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:00:15 PM (IST)

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை மொத்தமாக திரும்பப் பெற வேண்டும் - ஸ்டாலின்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:44:49 PM (IST)

அதிமுகவுக்கு ஆதரவு : தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் இபிஎஸ் உடன் சந்திப்பு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:21:04 PM (IST)

துாத்துக்குடி மாநகராட்சியில் நீடிக்கும் அவல நிலை : தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:01:10 PM (IST)

