» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாஜகவின் அழுத்தத்திற்கு விஜய் பணியமாட்டார் : செங்கோட்டையன் பேட்டி!
திங்கள் 13, ஏப்ரல் 2026 12:21:38 PM (IST)
ஜனநாயகன் திரைப்படம் இணையதளங்களில் வெளியானதற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தான் காரணம் என்று செங்கோட்டையன் குற்றம் சாட்டினார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக மக்கள் அனைவரும் தவெக தலைவர் விஜய் அவர்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர் பாஜகவின் அழுத்தத்திற்கு ஒருபோதும் தலைசாய்க்க மாட்டார். 'சிங்கம் தனியாகத்தான் வரும்' என்பதற்கு ஏற்ப, அவர் தலைமையில் தமிழகத்தில் புதிய ஆட்சி மலரும். தமிழகம் இப்போது அவரது கையில்தான் உள்ளது.
அதிமுக குறித்துப் பேசுகையில், "அதிமுகவை அழித்தது எடப்பாடி பழனிசாமிதான். அவர் துரோகத்தின் மொத்த உருவமாக இருக்கிறார்" என்று கடுமையாக விமர்சித்தார். மேலும், தவெக-வில் பெண்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான "ஜனநாயகன்" திரைப்படம் இணையதளங்களில் கசிந்தது குறித்துப் பேசிய அவர், "பாஜக மூத்த தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் தான் ஜனநாயகன் திரைப்படம் இணையதளத்தில் கசியக் காரணம். இதற்கு அவரே முழுப் பொறுப்பு" என்று நேரடியாகக் குற்றம் சாட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண், மானம், மொழியைக் காக்க மீண்டும் திமுக ஆட்சி: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 7:54:45 PM (IST)

வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து விஜய் மேல்முறையீடு
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:52:43 PM (IST)

உங்கள் வீட்டில் திருடிவிட்டு ரூ.2000 கொடுத்தால் வாங்குவீர்களா? சீமான் கேள்வி
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:23:56 PM (IST)

தமிழர் வாழ்வில் அமைதி, வளம் பெருகட்டும்: சரத்குமார் புத்தாண்டு வாழ்த்து!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:05:54 PM (IST)

அமைச்சர் சேகர் பாபு மகன்களின் நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:50:17 PM (IST)

மீனவர் நலநிதி ரூ.20,000-ஆக உயர்த்தப்படும் : குமரி பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் உறுதி!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:04:49 PM (IST)

