» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருப்பூரில் விஜய் பிரசாரம்: வெயில் தாங்காமல் 7 பெண்கள் உட்பட 9 பேர் மயங்கி விழுந்தனர்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 5:31:42 PM (IST)

திருப்பூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது, வெயிலின் தாக்கம் காரணமாக அக்கட்சியின் வேட்பாளர் மற்றும் 7 பெண்கள் உட்பட 9 பேர் மயக்கமடைந்தனர்.
தவெக தலைவர் விஜய், இன்று (ஏப்ரல் 14) திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்டார். இதற்காகச் சேலம் 6 வழிச்சாலை வழியாகப் பிரசார வாகனத்தில் அவர் திருப்பூருக்கு வருகை தந்தார். பெருமாநல்லூர் பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் காலை முதலே திரண்டிருந்தனர்.
திருப்பூர் பகுதியில் இன்று வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், காத்திருந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கோவை சூலூர் தொகுதி வேட்பாளர் சுகுமார், கணியூர் சுங்கச்சாவடியில் விஜய்யை வரவேற்றபோது திடீரென மயங்கி விழுந்தார். இதேபோல், பிரசார களத்தில் காத்திருந்த 7 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 9 பேர் அடுத்தடுத்து மயங்கினர்.
மயக்கமடைந்தவர்களுக்கு அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் உடனடியாகத் தண்ணீர் தெளித்து முதலுதவி அளித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடும் வெயில் காரணமாகப் பிரசாரத்திற்குப் பொது மக்கள் குழந்தைகளுடன் வர வேண்டாம் எனத் தவெக தலைமை ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும், தடையையும் மீறிப் பெண்கள் பலர் குழந்தைகளுடன் வெயிலில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் மீது பொறாமை? ஸ்டாலினை சந்தித்தது ஏன்? விமர்சனங்களுக்கு ரஜினி விளக்கம்!
ஞாயிறு 17, மே 2026 8:10:37 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் ஆவேசம்: இரும்பு கேட்டை உடைத்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு!
ஞாயிறு 17, மே 2026 7:42:28 PM (IST)

மே 10 முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் கணக்கீடு: ஆட்டோ-டெபிட் வசதியும் அறிமுகம்!
ஞாயிறு 17, மே 2026 11:42:15 AM (IST)

குருவாயூர் எக்ஸ்பிரஸில் நகை வியாபாரியிடம் 1½ கிலோ தங்க நகைகள் கொள்ளை!
ஞாயிறு 17, மே 2026 11:33:58 AM (IST)

காதலன் கண்முன்னே கொடூரம்: கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு 30 ஆண்டுகள் சிறை!
ஞாயிறு 17, மே 2026 11:04:00 AM (IST)

மக்களின் தீர்ப்பை கொச்சைப்படுத்தக் கூடாது : ஸ்ரீநாத் எம்எல்ஏ பரபரப்பு அறிக்கை!
ஞாயிறு 17, மே 2026 9:58:14 AM (IST)


