» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து : பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:18:27 AM (IST)



தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பஞ்சு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

தூத்துக்குடி சிப்காட் தொழில்பேட்டை வளாகப் பகுதியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்குச் சொந்தமான பஞ்சு கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக ஏராளமான பஞ்சு மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று சனிக்கிழமை பிற்பகலில், கிடங்கின் ஒரு பகுதியில் திடீரென தீப் பிடித்து எரியத் தொடங்கியது. பஞ்சு என்பதால் தீ மளமளவென கிடங்கு முழுவதும் பரவி, கரும்புகை வானை முட்டியது.

இது குறித்துத் தகவல் அறிந்த மாவட்ட அலுவலர் கருணாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மூன்று தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், நீண்ட நேரம் போராடித் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, உள்ளே ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாகக் கிடங்கின் ஒரு பக்கச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் மற்றும் இதர தளவாடப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின. தீ விபத்திற்கான காரணம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory