» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் கட்டாயம் ஆட்சி மாற்றம் வரும் : தூத்துக்குடியில் என்.ஆர். தனபாலன் பேட்டி!
திங்கள் 20, ஏப்ரல் 2026 8:49:18 AM (IST)
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்றும், மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த என்.ஆர். தனபாலன் பேசியதாவது:"முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறாகப் பேசிய யூடியூபரை கைது செய்ய தி.மு.க அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கள் இறக்கியதாகக் கூறி, பனை தொழிலாளி மீது காவல் சார்பு ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. இதில் காலில் காயமடைந்த தொழிலாளி தனது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால், அரசு அவருக்கு ₹1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தற்போது கோடை காலம் என்பதால் தமிழகம் முழுவதும் பனை தொழிலாளர்கள் பதநீர் இறக்கி விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், போலீசார் அவர்கள் மீது கள் இறக்குவதாகக் கூறி நெருக்கடி கொடுக்கின்றனர். இதனைத் தவிர்க்க, அண்டை மாநிலங்களைப் போலத் தமிழகத்திலும் கள் இறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
திமுக ஆட்சியில் சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். எனவே, நடைபெறவுள்ள தேர்தலில் கட்டாயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழர்களை நேருக்கு நேர் நின்று சரணடைய வைக்க முடியாது: பாஜக - அதிமுக மீது ராகுல் கடும் தாக்கு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 12:50:35 PM (IST)

தென் மாநிலங்களின் ஆதரவு இல்லாமலேயே பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கும்: வைகோ எச்சரிக்கை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 12:07:56 PM (IST)

திமுகவை எதிர்த்தால்தான் வளர முடியும் என்பது தவறு: விஜய் குறித்து முதல்வர் விளக்கம்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 11:29:33 AM (IST)

தமிழகத்தில் நாளை ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்: 23-ம் தேதி வாக்குப்பதிவு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 10:40:19 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 9:15:02 AM (IST)

நவத்திருப்பதியில் சித்திரை திருவிழா தொடக்கம்: ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கொடியேற்றம்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 9:00:41 AM (IST)

