» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக கூட்டணிக் கட்சி முகவர்கள் மிகுந்த விழிப்புடன் பணியாற்ற வேண்டும்: இபிஎஸ் வேண்டுகோள்!
சனி 25, ஏப்ரல் 2026 3:36:21 PM (IST)
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி முகவர்கள் மிகுந்த விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழகத்தில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்து, தமிழக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக அதிகமான வாக்குப்பதிவை உறுதி செய்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.தற்போது நடைபெற்று வரும் திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பை நாம் கண்கூடாகக் கண்டோம். விரக்தியின் விளிம்பில் உள்ள திமுகவினர், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டு இந்தத் தேர்தலிலும் முறைகேடுகளில் ஈடுபடத் தயாராக உள்ளனர்.
முகவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்:
வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்கள் வெற்றிக் கனியைச் சிந்தாமல், சிதறாமல் பெற்றிடப் பின்வரும் அம்சங்களைக் கவனத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும்:
நேரம் தவறாமை: வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே அடையாள அட்டையுடன் மையங்களுக்குச் செல்ல வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் காலதாமதம் செய்யக்கூடாது.
வெளியேறக் கூடாது: ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து, தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை எக்காரணத்தைக் கொண்டும் மையத்தை விட்டு வெளியே வரக்கூடாது.
இயந்திரங்களைச் சரிபார்த்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள சீல்கள் (Seals) முறையாக உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். இயந்திரத்தில் பதிவான வாக்குகளும், படிவம் 17C-இல் உள்ள வாக்குகளும் சரியாக உள்ளனவா என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இயந்திரத்தின் தேதி மற்றும் நேரத்தையும் சரிபார்க்க வேண்டும்.
தபால் வாக்குகள்: தபால் வாக்குகள் எண்ணப்படும் போது மிகவும் கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.
முறைகேடுகளைத் தடுத்தல்: ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அறிவிக்கப்படும் வாக்குகள் சரியாக உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும். ஏதேனும் மாறுதல்கள் இருந்தால், உடனடியாகத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட வேண்டும். வேட்பாளரின் தலைமை முகவர் (Chief Agent) மூலம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்து, அதற்குரிய ஒப்புகையைப் பெற வேண்டும். தீர்வு கிடைத்த பின்னரே அடுத்த சுற்று எண்ணிக்கையைத் தொடங்க அனுமதிக்க வேண்டும்.
"தீயசக்தியைத் தடுத்து நிறுத்துவோம்”
திமுகவினர் வதந்திகளைப் பரப்புவதிலும், தில்லுமுல்லு செய்வதிலும் கைதேர்ந்தவர்கள். எனவே, வாக்கு எண்ணும் மையங்களில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது துஷ்பிரயோகங்கள் நடந்தால், உடனடியாக மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மக்களின் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையில் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். தமிழக மக்களைக் காக்க, தீயசக்தியான திமுக மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுத்து நிறுத்துவோம். இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகளை அரசியலுக்குப் பயன்படுத்துவதா? த.வெ.க தலைவர் விஜய் மீது விசிக புகார்!
சனி 25, ஏப்ரல் 2026 4:26:08 PM (IST)
_1777100644.jpg)
தென் தமிழக கடலோர பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி : ஏப்.30 வரை மழை பெய்ய வாய்ப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 12:34:37 PM (IST)

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் கணிப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 12:15:10 PM (IST)

சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 25, ஏப்ரல் 2026 10:44:27 AM (IST)

செங்கோட்டை, குமரி ரயில் சேவையில் மாற்றம்: பாலக்காடு ரயில் சேவை பகுதியாக ரத்து!
சனி 25, ஏப்ரல் 2026 10:36:04 AM (IST)

தூத்துக்குடியில் ஒருவர் கட்டையால் தாக்கி கொலை : மதுபோதையில் நண்பர் வெறிச்செயல்!
சனி 25, ஏப்ரல் 2026 10:21:03 AM (IST)

