» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஷீரடி சாய் பாபா கோயிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம் : மனமுருகி வழிபட்டார்
புதன் 29, ஏப்ரல் 2026 4:06:53 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய் பாபா கோயிலில் இன்று தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு தவெக ஆதரவு வழங்கியது. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விஜய் தீவிரப் பரப்புரை மேற்கொண்டார்.
வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், விஜய் ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். நேற்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா சென்ற விஜய், அங்கிருந்து கார் மூலம் ஷீரடி சாய் பாபா கோயிலுக்குச் சென்றார். கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தபோது, அங்கிருந்த ரசிகர்கள் உற்சாகமடைந்து அவரைப் பார்க்கக் திரண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கள்ளக்காதலை எதிர்த்தவர் கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை - பத்மநாபபுரம் நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 29, ஏப்ரல் 2026 5:00:02 PM (IST)

பேரறிவாளன் வழக்கறிஞராகப் பதிவு: நீதித்துறைக்கே இழுக்கு - காங். எம்பி சுதா கடும் கண்டனம்
புதன் 29, ஏப்ரல் 2026 4:23:21 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் மே 1ஆம் தேதி மதுக்கடைகள் மூடல் - ஆட்சியர் உத்தரவு
புதன் 29, ஏப்ரல் 2026 3:54:51 PM (IST)

மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
புதன் 29, ஏப்ரல் 2026 10:44:57 AM (IST)

தமிழகத்தில் சிலிண்டர் விநியோகக் காத்திருப்புக் காலம் அதிரடியாகக் குறைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி!
புதன் 29, ஏப்ரல் 2026 10:17:53 AM (IST)

தூத்துக்குடியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை: பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணிகளை ஆணையர் ஆய்வு
புதன் 29, ஏப்ரல் 2026 8:41:11 AM (IST)


