» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரயில்வே மின்பாதை பராமரிப்பில் புதிய மைல்கல் : நாசரேத்தில் சிறப்பு ரயில் பெட்டி அறிமுகம்!
வெள்ளி 1, மே 2026 8:37:07 AM (IST)
மதுரை கோட்டத்தில் ரயில் பாதைகள் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ள நிலையில், மின் கம்பிகளைப் பராமரிக்கவும் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்யவும் அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு ரயில் பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சிறப்பு ரயில் பெட்டி ஒரு சிறிய நடமாடும் பணிமனை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மின்சார கம்பி வடம் அருகே சென்று பழுது பார்க்கத் தானாக உயரும் லிப்ட் வசதி. பராமரிப்பு பணிகளுக்காகப் பெட்டியிலேயே ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. பழுதுகளைச் சரி செய்யத் தேவையான அனைத்து நவீனக் கருவிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ரயில் நிலையத்தில் இந்த வசதி தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது 18 சிறப்புப் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, பழனி, காரைக்குடி, ராஜபாளையம், ராமநாதபுரம் ஆகிய நிலையங்களில் இதற்கெனத் தனிப் பாதை அமைக்கப்பட்டு இவை தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
மானாமதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, புனலூர் ஆகிய நிலையங்களில் இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரயில் பாதைக்கு அருகே 2 மீட்டர் தூரத்தில் வளர்ந்துள்ள மரங்களால் மின் கம்பிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, ரயில் பாதை அருகே ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் குறித்துத் தகவல் தெரிந்தால், உடனடியாக அருகில் உள்ள ரயில் நிலைய அதிகாரி அல்லது கேட் பாதுகாவலரிடம் தெரிவிக்குமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டின் கடன் 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடியாக உயர்வு: வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
செவ்வாய் 16, ஜூன் 2026 9:32:03 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, ஜூன் 2026 9:26:19 PM (IST)

குழந்தையின் பிரேதப் பரிசோதனை இடத்தில் தவெக எம்எல்ஏ பேரம்? - கனிமொழி எம்பி குற்றச்சாட்டு!
செவ்வாய் 16, ஜூன் 2026 5:44:39 PM (IST)

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்!
செவ்வாய் 16, ஜூன் 2026 5:25:24 PM (IST)

அதிமுகவில் அடுத்த விக்கெட் அவுட்: எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:05:11 PM (IST)

மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராகப் போராட்டம்: புரட்சிப் படை இயக்கம் எச்சரிக்கை!
செவ்வாய் 16, ஜூன் 2026 3:42:40 PM (IST)


