» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜய் ஆட்சி அமைக்க அழைக்க வலியுறுத்தல்: த.வெ.க பெண் நிர்வாகிகள் உண்ணாவிரதம்!
வெள்ளி 8, மே 2026 12:05:34 PM (IST)
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி, திண்டுக்கல்லில் அக்கட்சியின் நிர்வாகிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், திருச்சி சாலை கல்லறை மேடு அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு உறுப்பினர் சரண்யா தலைமையில், வளர்மதி மற்றும் அகஸ்தியா ஆகியோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை உடனடியாக ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு 15 நாட்கள் அவகாசம் (கெடு) வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் புரோட்டா சாப்பிட்ட சட்டக்கல்லூரி மாணவர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை!
சனி 9, மே 2026 8:53:06 AM (IST)

சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி மீது 7 பிரிவுகளில் வழக்கு - போலீஸ் நடவடிக்கை!
சனி 9, மே 2026 8:34:15 AM (IST)

தமிழகக் கனிம வளங்களை அழிக்க பாஜக சதி? சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் கண்டனம்!
வெள்ளி 8, மே 2026 9:03:22 PM (IST)

தமிழக முதல்வராகிறார் விஜய்? 3வது முறையாக ஆளுநரைச் சந்தித்து உரிமை கோரினார்!
வெள்ளி 8, மே 2026 8:11:36 PM (IST)

காங்கிரஸ் ஒரு ஆபத்தான கட்சி: விஜய்க்கு அர்ஜுன் சம்பத் பகிரங்க எச்சரிக்கை!
வெள்ளி 8, மே 2026 4:43:35 PM (IST)

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புதிய திருப்பம்: விஜய்க்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு
வெள்ளி 8, மே 2026 3:59:57 PM (IST)


