» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கேரளாவுக்குக் கனிம வளங்கள் கடத்தல் முற்றிலும் நிறுத்தம்: குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அறிவிப்பு!
சனி 9, மே 2026 4:08:42 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குக் கனிம வளங்கள் கடத்தப்படுவது முழுமையாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கனிம வளக் கடத்தலைக் கட்டுப்படுத்த மாவட்ட எல்லைப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து எஸ்பி ஸ்டாலின் கூறியதாவது: கேரளாவுக்குக் கனிம வளங்கள் கொண்டு செல்வதைத் தடுக்க எல்லைப் பகுதிகளில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.மாவட்டத்திற்குள் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே கனிம வளங்களைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் விதிகளுக்குப் புறம்பாகக் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிடிபட்ட இந்த லாரிகளை நிரந்தரமாக அரசுடமையாக்க தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், அனுமதியின்றி கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடத்தலில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தின் புதிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து; ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட உறுதி!
சனி 9, மே 2026 5:40:29 PM (IST)

தமிழகத்தின் முதல்வராகிறார் விஜய்: விசிக ஆதரவுடன் ஆட்சி அமைப்பது உறுதி - தொண்டர்கள் உற்சாகம்!
சனி 9, மே 2026 4:39:12 PM (IST)

தமிழகத்தில் அமையவுள்ள புதிய ஆட்சிக்கு வாழ்த்து: எடப்பாடி பழனிசாமி திடீர் சிக்னல்!
சனி 9, மே 2026 3:44:29 PM (IST)

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு மரண தண்டனை: போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
சனி 9, மே 2026 12:33:55 PM (IST)

முதல்வராகும் முன்பே, விஜய் போர்ஜரியில் ஈடுபடுகிறார் : டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!
சனி 9, மே 2026 12:23:27 PM (IST)

த.வெ.க-விற்கு தம்பி திருமாவளவன் ஆதரவு அளிக்க வேண்டும்..- ராமதாஸ் வலியுறுத்தல்!
சனி 9, மே 2026 12:12:14 PM (IST)


